பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

இராக்கெட்டுகள்


 வாகவுள்ள பாதையில் பிரயாணம் செய்தது. இவ்வாறு நூற்றுக்கணக்கான மைல் உயரத்தில் பூமியின் மேற்பரப்பிற்கு இணையாக இருக்குமாறு மேலும் மேலும் சென்றது.

இராக்கெட்டு அனுப்பப்பெற்ற இடத்திலிருந்து 600 மைல் தூரத்திற்குமேல் சென்றதும் குறிப்பிடப்பெற்ற நேரம் வந்தது. இஃது அயனப்பாதையில் நுழைவதற்கேற்ற தருணமாகவே இருந்தது. ஆனால், அது போதுமான

படம் 37: செயற்கைத் துணைக்கோள்
தூக்கி எறியப் பெறுவதைக் காட்டுவது

வேகத்திற்கு அண்மையில் கூடச் செல்லவில்லை. இந்நிலையில் மூன்றாவது நிலை மோட்டார் சுடப்பெறுவதன் மூலம் உயிர்பெற்று அதனை மணிக்கு 18,000 மைல் வீதம் முடுக்கிவிடாவிட்டால் அது, தான் வானவெளியில் சுவடிட்ட மிகப் பெரிய நீள் வட்டத்தின் கீழ்நோக்கியுள்ள பாதிப் பகுதியில் பூமியை நோக்கி விழத் தொடங்கி விடும்.