பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 இராசராச சேதுபதி

அகழ் - அகழி: ஆழி - கடல்; சுலாவும் - சூழ்ந்திருக்கும்; பெரும்புவி பரந்த பூமி, அறம் இகழாதவன்-அறத்தைக் கீழாக நினையாதவன், அற நிலை தவறாதவன்; திகழ்மானுடர் - உலகில் நிலவும் மனிதர் உறுகண் துன்பம்; உலகில் உள்ள மனிதர் துன்பத்தைப் போக்காது பெரிய தேவரை நீ புகழுமாறு சிறையிலிருந்து விடுவித்தாய் என்பது வெளிப் LI 5T L– ; மலர்ப்பூங்கொடியே - மலர்க்கொடி போன்ற பெண்ணே விளி; திகழ் மான் இடருறு கண் - விளங்கும் மான் போலத் தாவும் கண் கண் விடுக்காதிருந்தே - கண்ணைக் கையிலிருந்து வெளிப்படுத்தாமலிருந்தே வரை நீ புகழ் கூர்தரச் சிறை நீக்கலுற்றாய் - வரை மலை முலை சிறை நீக்கலுற்றாய் - கட்டிலிருந்து வெளிப்படுத்தினாய்.

341

இன்புடை கற்றமி ழாய்கின்ற வேந்த னிரும்புலவர் தன்புடை வைத்துவப் போன்ராச ராசன் றமிழ்வரைவாய் என்றெயிவம் போலுவை மாவீடு தந்துளை யேனுநின் கண் அன்புடை யேற்குத் திருவடி யேதந் திலாயணங்கே.

இன்புடை - இனிமையுடைய நற்றமிழ் - நல்ல தமிழ், இலக்கியத் தமிழ்; ஆய்கின்ற - ஆராய்கின்ற; புடைவைத்து - பக்கத்தில் வைத்து: உவப்போ ன் - மகிழ்விப்பவன், என் தெய்வம் போலுவை - என் தெய்வம் போலக் காட்சியளிக்கின்றாய்; மாவீடு தந்துளை - பெரிய வீட்டின் பத்தைத் தந்துள்ளாய்; திருவடியே தந்திலாய் - திருவடியை அளித்தா யல்லை மா வீடு தந்துனை - மா ப் போலும் முலையை விடுத்தாய்: மா - யானை, முலை; திரு வடி - அழகிய மாவடு போலும் கண்.

B42

படைகாட் டியவென்றி பாடும் புலவர் பரிசிலர்க்குக் கொடைகாட் டியகரன் சீராச ராசன் குளிர்வரையாய் கடைகாட் டிலாது கடைக்கயல் காட்டிய காரணத்தா லிடைகாட் டிலாகங்கை கிற்கே யிராசி யிலையென்பரே.

படை காட்டிய வென்றி - போரில் பெற்ற வெற்றி; பாடும் புலவர் - புகழ்பாடும் புலமையாளர்; பரிசிலர் - பரிசில் வேண்டி இரப்போர்; இடை காட்டிலா நங்கை-இடையைக் காட்டாத பெண்ணே, விளி. நுண்ணிடை யாள் என்பது புலப்படுத்தியவாறாம். கடையைக் காட்டாது கடைக்கு