உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இராசராச சேதுபதி

-

உற்றார் - சுற்றத்தார், பற்றலர் - பகைவர்; ஒசித்து அழித்து: விசித்திசம் - அற்புதம், ஓங்கலுறும் இந்த வேளை - மிகுதியாயிருக்கும் இந்தச் சமயத்தில் வசிப்படுதல் - வசமாதல், ஈடுபடுதல், வசியமாதல்: பார்ாது இருளின் வசத்தள் என்னே என்க. இருளின் வசத்தள். அறி யாமை கொண்டவள். விசித்திரம் ஓங்கல் - அழகிய மலை, முலை: வசி - வாள். கண்; படுகிற்கிலள்-படும்படியாகச் செய்திலள்: மறைத்துள் ளாள் என்றபடி.

890

புயல்கையின் வைத்தவன் பாற்கர வேந்தன் புரிந்துதவ முயல்கையி னுற்றவன் பொயகெஞ்ச வஞ்சரை மூடரைச்சேர் மயல்கை யறவிட்ட சீராச ராசன்றன் வார்கடல்வாய்க்

கயல்கையின்வைத்து வெறுமுலை வைத்தென்ன காண்பதுவே.

புயல் கையில் வைத்தவன் - மேகததைக கையல கொண்டவன: மேகம் போலக் கொடையாளன் என்பதாம். பொய் நெஞ்ச வஞ்சர் - பொய் பொருத்திய நெஞ்சினையுடைய வஞ்சகர்; மூடர் - அறிவற்றவர்; மயல் - மயக்கம்: கையறவிட்டவன் - முற்றும் நீங்கியவன்; வார் கடல் வாய் - பெருங்கடலில், பெருங்கடல் சூழ்ந்த உலகில்: கயல் - கயல்மீன்; வெறும் உலை வைத்து - அடுப்பில் உலை மட்டும் வைத்து: கயல் கையின் வைத்து-கயல்மீன் போன்ற கண்ணைக் கையால் மறைத்து; வெறுமுலை வைத்து - முனல்மட்டும் வெளிப்படுத்தி.

891. தாருக்கு கேர்கொடை யாகும் விசயன் றனைப்புரந்த காருக்கு நேர்கிற்குஞ் சீராச ராசன் கமழ்வரைவாய்

ஆருக்கு நோக்க மளியா தவரென் றறிவித்துப்பின் மார்புக் கிருவரை யேற்றுகிற் பீரிது மாண்பிலதே.

தார் - சேனை: விசயன் - அருச்சுனன்; புனந்த - காப்பாற்றிய : கார் - மேகம்; மேக வண்ணனாள திருமால்; திருமாலுக்கு ஒப்பாக நிலை பெற்றிருப்பவன் இராசராசன். நாடு காக்கும் அரசரைத் திருமாலுக்கு ஒப்புக் கூறுதல் மரபாகும். ஆருக்கும் - எவருக்கும்; நோக்கமளியாதவர்பார்ப்பதற்கு இடம் கொடாதவர்; மார்புக்கு இருவரை ஏற்று நிற்பீர் . மார்பிலே இரண்டு பேரை ஏற்றுக் கொண்டுள்ளீர்; இருவரை-இருமலை, இருமுலை; மார்புக்கு இருவரை ஏற்பது ஒழுக்கமன்று என்றவாறு. கோக்கம் - கண், பார்வை; மாண்பு - பெருமை; சிறப்பு.