பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧVΙΙΙ இராசராசேசுவர சேதுபதி

இராசராசசேதுபதியின் இயற்பா

இராசராசேசுவர முத்துராமலிங்க சேதுபதி இசைச்சுவைஞர் மட்டுமன்று : கலைஞரும் கூட. தாமே இயற்பாக்கள் எழுதவும் வல்லவர்.

ஐந்துகையன் ஏகதந்தன் அந்தமில் விநாயகள் சந்திரனை முந்திவென்ற தந்திமுக வாழியே .

பன்னரிய நன்னயம்செய் பன்னிருகை வேலன் வன்னமயில் மீதில்வரும் மன்னுகுகன் வாழியே.

திங்களொடு கங்கைசூடும் செங்கதிராம் வேனியிற் றங்குமீசர் மங்கைபாகர் சங்கரன்றாள் வாழியே.

சங்கரன்றன் பங்கினிலே தங்கியுல காண்மலை மங்கைமாயன் றங்கை யென்றும் மங்களமாய் வாழியே.

ஜோதிருபன் வேதகிதன் சூதின்மது சூதனன் தீதிலாத தேவ தேவன் சீதபாதம் வாழியே

இந்த இயற்பாவில் சிறப்பொன்றுண்டு. சிவன் கோயிலில் வழிபடும்முறை சொல்லப்படுகிறது. முத்தபிள்ளையாரை வணங்கிப் பிறகு முருகனை வழிபட்டுத் திங்களோடு கங்கைசூடும் வேணியனை வணங்குவர் அடியார். சங்கரன் பங்கிலுறை மலைமகளை அடுத்துவழிபடுவது முறை. சிறப்பு மிக்க சிவன் கோயில்களில் திருமாலுக்கும் சந்நிதியுண்டு. திருமாலவ தரமான மதுசூதனனையும் சேதுபதி பாடிப் பரவுகின்றார்.

இந்த இயற்பாவின் இறுதியடிகள் இரண்டும் சேது சமஸ்தான மகா வித்துவான் இராகவையங்கார் இணைத்ததாகும். அவற்றில் சேது பாலனஞ்செய் இராசராசமுத்து ராம லிங்க சேதுபதியை அவர் வாழ்த்து

ూ அ е доп т.

இறுதியடிகள் பின்வருமாறு :

ராமசேது பாலனஞ்செய் ராமநாத சேவையன் நாமமெங்கும் ஓங்கு முத்து ராமலிங்கன் வாழியே ராஜவீரியன் சேதவுதாரியன் ராஜபர மேஸ்வரன் ராஜசூரியன் தேவகார்யன் ராஜராஜன் வாழியே.