பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை

காப்பு

புவிவிற் றிருக்கும் புயன்ராச ராசன் புகழ்விளைக்குங் கவிவிற் றிருக்கு மொரு துறைக் கோவையைக்காப்பதற்கென் சவிவிற் றிருக்கு முளத்தறி வோங்கத் தழைத்திருக்குக் திவிவிற் றிருக்கும் புலமா மகளார் திருப்பதமே.

புவி விற்றிருக்கும் - உலகத்தைத் தாங்கும் , உ ல கி ைன அரசாளும் புயன் - தோள்களையுடையவன். கவி வீற்றிருக்கும் - கவிதை மகள் திருவோலக்கங் கொண்டிருக்கும்; கவிதைப் பண்புகள் நிறைந் . விளங்கும் என்றபடி, சவி - ஒளி. சவி வீற்றிருக்கும் உளம் - ஒளி தங்கியிருக்கும் மனம்; அறிவோங்க - அறிவு நாள்நாளும் ப்ெருக திவிசுவர்க்கம் பிரமயோகம்; இனிமை என்றும் கொள்ளலாம். புலமா மகளார் - அறிவின் செல்வி யாகிய நாமகள். புலமா மகளார் திருப்பதம்

என் உளத்துத் தழைத்திருக்கும் என்க.

துறை

தலைவி நாணிக் கண் புதைத்தலைக் கண்டு தலைவன் கூறியது.

1.

பூவுடன் வாழ்புகழ்ச் சீராச ராசன் பொருப்பினும்பாற் கோவுட னே புண்ட ரீகங் குலாவலுங் கோட்டுமத மாவுட னே தணிந் தேறிடை மேவலும் வந்துகண்டார் காவுட னேசொலு மிவ்வர சாள்வது கன்றெனவே.

பூவுடன் - பூமிப் பரப்பெங்கும்; பொருப்பு - மலை; கோ - பசு, கண் ; புண்டரீகம்-புலி, தாமரை, கோவுடனே புண்டரீகம் குலாவல் - பசுவோடு புலி விளையாடல்; கண்ணோடு கையாகிய தாமரை ம்ேவுதல் கோட்டு மதமா - யானை, தணிந்து கோபம் ஆறி, தாழ்ந்து; கோட்டு மதமா