பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்பான கிளவித்துறைக் கோப்புடைய இதனைத் தொடர் நிலைச் செய்யுள் என்பர். தண்டியலங்காரப் பழையவுரை, கோவையும் பொருட்டொ டர் நிலைச் செய்யுள் எனக் கொள்க’ என்று குறிப்பிடுகிறது. பெருங்காப்பியம், சிறுகாப்பியம் எனப் பாகுபடும் இத் தொடர்நிலைச் செய்யுள் வகையுள் கோவை சிறு காப்பியமாகும்.

அகப்பொருள் இலக்கண நூலார் தாம் கூறும் இலக்கணத்திற்கு இலக்கி பமாகக் கோவை நூல்களை எடுத்துக் காட்டியுள்ளனர். இறையனாரகப் பொருளுரைகாரர் பாண்டிக் கோவையிலிருந்து 327 பாடல்களை உதாரணமாகக் காட்டியுள்ளார். இவர் காட்டிய பாடல் களிலிருந்துதான் இந் நூலைப்பற்றி நாம் அறிய இயலுகிறது. தனியாக இந்நூல் முழுமையாய் நமக்கு இதுவரை கிட்டவில்லை. களவியற் காரிகையில் திருக்கோவையார், பாண்டிக்கோவை இரண்டும் எடுக தாளப் பட்டுள்ளன. நம்பியகப்பொருள் நூலுரையுள் தஞ்சைவாணன் கோவை முழுமையும் வந்துள்ளது. மாறனகப்பொருளுக்கு இலக்கியமாய் அமைந்தது திருப்பதிக்கோவை. இலக்கண விளக்க உரையில் திருக் கோவையார், அம்பிகாபதி. கோவை, தஞ்சைவாணன் கோவை, கப்பற் கோவைப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இலக்கணத்திற்கு இலக் கியமாக வந்தமையால் இக்கோவைகள் கற்பாரிடையே மிகவும் போற்று தலைப்பெற்றன.

தெய்வத்தின் மேலும், அரசர், வள்ளல்கள் முதலியோரின் மேலும் பாடப்பெற்ற கோவை நூல்கள் பலவாகும். தெய்வ பரமான திருக் கோவையாருக்குத் திருச்சிற்றம்பலக் கோவை என்று இடப்பெயர் சுட்டியும் ஒருபெயர் உண்டு. இது தில்லைச் சிற்றம்பலத்தைச் சிறப் பிப்பது . இம் மரபினை ஒட்டித் தெய்வத்தின் மேல் தல சம்பந்தமாக மதுரைக்கோவை, திருவாரூர்க்கோவை, வெங்கைக்கோவை, திருக் கழுக்குன்றக்கோவை, திருப்பதிக்கோவை, பழனிக்கோவை, மயூரகிரிக் கோவை, சீகாழிக்கோவை முதலியவாகப் பல நூல்கள் பிறந்துள்ளன. அரசர் மீது பாடப்பெற்ற கோவைகளில் பாண்டிக்கோவை, குலோத்துங்க சோழன் கோவை என்பவை குறிப்பிடத்தக்கவை. தஞ்சைவாணன் கோவை, கருமாணிக்கன் கப்பற்கோவை, உத்தண்டன் கோவை, அசதிக் கோவை, ஆனந்தரங்கன்கோவை முதலியன வள்ளல்கள் மீது பாடப் பெற்றவையாகும். இவ்வாறாகக் காலந்தோறும் வந்த அகப்பொருட் கோவை நூல்கள் பலப்பல.

அகப்பொருட் கோவை நானுறு கட்டளைக் கலித்துறைப் பாக்களால் அமைவதே முறை என முதற்கண் இலக்கியம் கண்டு இலக்கணமும் வகுக்கப்பெற்றது. கட்டளைக்கலித்துறை கோவைக்கே யுரிய பாடல் வகையாய் வரும் மரபுபற்றி இப் பாவினைக் கோவைக் கலித்துறை'