பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 37

யிடல், அதாவது கைகளால் மறைத்து வைத்தல்; இரும் பாந்தனையுடை யீர் - பெரிய பாம்பாகிய அல்குலையுடையீர், பாந்தள் -பாம்பு, அல்கு வல்விலங்கு - யானை, முலை. வல்லும் விலங்குமாகிய முலை எனினும் அமையும். வல் - சூதாடு கருவி.

39

துண்டிர பல்லவர் போர்வென்ற சோழர் துஜனவலியார் திண்டீர வஞ்சினத் தண் செம்பி காட்டுத் திறன் மறவர் ஒண்டிர வங்கிசன் சீராச ராச னுயர் கிரிவாய்க் கண்டிர வங்கை மறிப்ப ரடக்கார் களிற்றையென்னே.

துண்டீர பல்லவர் - தொண்டைநாட்டுப் பல்லவர்; சோழர் துணை வலி - சோழர்க்குத் துணைவலியாகச் .ெ ச ன் ற து செம்பிநாட்டு மறவர் சேனை, துணை வலி - பக்கபலம்; திண் திர வஞ்சினம் - நிலைத்த உறுதியான வஞ்சினம்; வஞ்சினம் - கடுங்கோபம்; சூளுறவு. திறல் மறவர் - வலிமை பெற்ற வீரர்; வங்கிசன் - வழித் தோன்றல் கண்டி ரவம் கை மறிப்பர் - சிங்கத்தைக் கையால் மறைப்பார்; அடக்கார் களிற்றை - யானையை அடக்கார். கண்திர அங்கை மறிப்பர் - கண் முழுமையும் கையால் மறைப்பார்; அடக்கார் களிற்ற்ை - களிறா கிய முலையை அடக்கார்.

70

குளிர் சிந்து பூம்பொழிற் றேவையர் கோன்றிரை கோத்தமுத்தம்

ஆா

மிளிர் சிந்து பூந்துறைச் சேது மகீபன் மிடியர்க்குப்பொற் றளிர்சிந்து கற்பகஞ் சீராச ராசன் றடவரையீர் ஒளிர்சிங்து காடுற்ற யான்மலை யாள்முன் னுற்றனனே.

சிந்துதல் - பெய்தல், தூவுதல்; பூம்பொழில் - பூஞ்சோலை; தேவை யர் - இராமேச்சுரப் பதிவாழ்நர்; திரை - அலை; திரைகோத்த முத்தம் மிளிர் - அலைகளால் திரட்டப்பட்ட முத்துகள் ஒளிவீசும்: சிந்து பூந்துறை - மல்ர்கள், மகரந்தம், தேன் முதலியன விழுகின்ற அழகிய கடற்றுறை; மகீபன் - அரசன்; மிடியர் - வறியர்; பொற்றளிர் சிந்து கற்பகம் - பொன்னாகிய தளிரைத்தரும் கற்பகமரம் போல்வா ன்; பொன்னை வழங்குபவன்; ஒளிர் சிந்து நாடு- விளக்கமான சிந்து தேசம், மலையாளம் - மலையாள நாடு; சிந்து நாட்டைப் பெற்ற யான் மலை நாட்டையும் பெறக் கருதினேன் என்பதாம். ஒளிர் சிந்து நாடுற்ற யான் - விளங்கும் கடலாகிய கண்ணைத் தேடுற்ற யான்; மலை ஆள முன் உற்றனன் - முலையாகிய மலையை ஆள முன்னே பொருந்தினேன்.