பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

O இராசராச சேதுபதி

போன்ற முலை; வெற்றிடை மேலும் காட்டல் - வெறுவிதான நுண்ணிய இடையின் மேலே வெளிப்படுத்தல்; குவலையம் - குவளைபோன்ற கண், கையால் குவலையம் முற்றும் மறைத்தல் - கையினால் கண்களை முழுவதும் மறைத்தல்; முழுதும் தெரிந்த - எல்லாம் அறிந்த முழுது ந்

தெரிந்த அணங்கு - நிர்வாணமான பெண்.

97

உம்பரஞ் சாதருள் சீராம முர்த்தியை யுள்ள ன் பொடும் கம்பர சாட்சியன் சீராச ராசமன் ன ன வரைவாய்க் கொம்பர விந்த முகிழ்த்தா லனைய குவிமுலையார் அம்பரங் தாமரை யில்லாருள் ளாரென் ன திசயமே.

உம்பர் - வானுலகத் தேவர்; நம்பு அரசாட்சியன் - விரும்பும் அரசாட்சியுடையவன்; நன்வரை - நல்ல மலை; கொம்பு - பூங்கொம்பு; அரவிந்தம் முகிழ்த்தாலனைய - தாமரைப்பூ அரும்பினாற்போல; முகிழ்த் தல் - அரும்புதல்; தாமரை முகை முலைக்கு உவமை; அம்பரம் - அம்பு அரம்: இரண்டும் கண்ணுக்கு உவமை. தாமரையில்லார் - தாமரை மலர் போன்ற கையிடத்துக் கொண்டுள்ளார் ; அம்பரம்தாம் அரை இல்லார் - ஆடை அரையில் இல்ல ாதவர்; அம்பரம் தாமரையுள்ளார் - மேலிடத்தே, அதாவது மார்பில் தாமரை முகை போன்ற முலையினைக் கொண்டுள்ளார். அம் பரம் தாமரை - அழகிய சிறந்த தாமரை முகை போன்ற முலை என்றும் உரைக்கலாம். தாமரை உள்ளாரும் இல்லாரு மாகத் தோற்ற மளிப்பதால் அதிசயம் என்றார்.

98

சுரும்பு முரல்குழற் சீராச ராசேச் சுரியெனுஞ்சொற் கரும்பு குலதன மாக்கொண்டு போற்றலிற் காசினியாள் விரும்பு புயாசலன் சீராச ராசமன் வெற்பனையிர் அரும்பு தனையளித் திட்டீர்செவ் வாயை யவாவுமெற்கே,

சுரும்பு முரல் குழல் - பூவின் ஏதுவால் வண்டு ஒலிக்கும் கூந்தல் ; சுரும்பு - வண்டு : சீராசராசேச்சுரி - சேதுபதிகளின் குலதெய்வம் : சொற்கரும்பு - புகழ்பெற்ற கரும்பு, சொல்ல இனிக்கும் தெய்வம் ; குலதனம் - குடும்பச் சொத்து காசினியாள் - பூமிதேவி ; புயாசலன் தோள்களாகிய மலையையுடையவன். அரும்புதனை அளித்திட்டிர் செவ்வாயை அவாவும் எற்கே - செவ்வாய்க் கோளை விரும்பிய எனக்கு அரிய புதன் கோளைத் தந்தீர். அரும்புதனை அளித்திட்டிர் - தாமரை அரும்புக்கொப்பாம் முலையினைத் தந்தீர் , செவ்வாய் - செவ்வரிக்கு இடமான கண் .