உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 38 இராமன் - பன்முக நோக்கில் போகும் இடங்கள் எல்லாம் பாலையாகவே மாறிவிட்டன. தாடகையின் வரலாற்றைக் கூறும் விசுவாமித்திரன், இந்த நுணுக்கத்தையும் கூறிவிடுகிறான். இயற்கையை அழிக்கின்ற காரணத்தால் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற தருக்கரீதியான உண்மையை இராமனுக்குக் குறிப்பாகப் போதித்தான் விசுவாமித்திரன். வந்தாள் தாடகை இவ்வாறு முனிவன் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே தாடகை தென்பட்டாள். தான். இதுவரை யாருடைய கொடுமையை வருணித்தானோ அந்த மூலகாரணமே இப்பொழுது எதிரே தோன்றிவிட்டது. விசுவாமித்திரன் ஏவலின்படி அவளைக் கொல்ல வில்லில் கை வைத்த இராகவன், அப்படியே நின்று விட்டான். ஏன் நின்று விட்ான் என்பதைக் கவிஞன் இதோ பேசுகிறான். "பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான்” (374) ஆறிநின்றது அறன் அன்று ..... கொல்க’ தசரதகுமாரன் மனத்தில் ஒடிய எண்ணங்களைத் தன் நுண்ணுணர்வால் அறிந்த விசுவாமித்திரன், அரண்மனையிலேயே பிறந்து வளர்ந்து உலகத்தின் கொடிய பகுதியைக் காணும் அனுபவத்தை இதுவரை பெறாத இராமனுக்கு கூறத் தொடங்கினான். இதுவரை இராகவன் அறிந்த உலகத்தில் மக்கள் என்ற பொதுப் பெயரில் ஆண், பெண், பெரியர், சிறியர், அரசர், பொதுமக்கள், முனிவர்கள், துறவிகள் என்ற வேறுபாட்டை மட்டும் அறிந்திருந்தான். அரக்கர் என்ற பிரிவு அவன் இதுவரை காணாத ஒன்றாகும். அரக்கரிலும் ஆண், பெண் என்ற இருபிரிவுகள் உண்டு. அவர்களுடைய இனப்பெருக்கத்திற்காக இயற்கை அவர்களை ஆண், பெண் என்று படைத்ததே தவிர, தன்மையில், பண்பாட்டில் இந்த வேறுபாடு அவர்களிடம் இல்லை. சமுதாய நீதி வகுத்த அறநூல்கள் மக்களை ஆண், பெண்