உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் களுள் ஒன்றையும் வீடணன் கூறிவிடவில்லை. கும்பகருணன் இதைவிட மிக்க கடுமையான வார்த்தை களைக் கூறியிருக்கிறான்; சினமே வடிவான இராவணனை நோக்கி யாரும் பொறுக்க இயலாத முறையில் ஏசியிருக்கிறான். அதில் இராவணன் சினமடைந்ததாகத் தெரியவில்லை. இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வீடணன், அதனை விடக் கடுமையாகத் தான் கூறவேண்டுவது ஒன்றும் இல்லை என்று அறிந்திருந்தும், முனியற்க' என்று கூறுவது விந்தையே! ஒருவேளை தனது உட்கருத்தை இராவணன் அறிந்துகொள்வான் என்ற அச்சத்தால் முன்னெச்சரிக்கையாக இச் சொற்கள் தோன்றியிருக்கலாமோ என்று நினைக்க வேண்டி யிருக்கிறது. இஃது ஒருபுறம் இருக்க, வீடணன் கூறிய சொற் களையே எடுத்து ஆராய்வோம். 'இலங்கைமாநகரம் வானரத்தால் வெந்தது என்று கூறுதல் தவறுடையது. சானகியின் கற்புத் தீயினாலேயே அஃது அழிந்தது என்றும், உலகிடை யாருக்கும் வீழ்ச்சியென்பது மண், பெண் என்ற இரண்டில் ஒன்றாலேயே நேர்ந்துளது' என்றும் கூறினான். இதன் பிறகு நல்ல முறையில் சில காரணங் களை எடுத்துக் கூறுகிறான். அவற்றையும், அவற்றிற்கு இராவணன் கூறும் விடையையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டும். விடை கூறும் வகையில், இராவணனது பண்பாட்டில் ஒரு பகுதியை யும் காண்கிறோம். - "廚 தவஞ்செய்து வரங்கள் பெற்ற காலத்தில், பலராலும் பலவற்றாலும் தோல்வி எய்தலாகாது