உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் சமயத்தில், கருடனால் பகைவர் விடுதலை பெற்றுச் செய்த ஆரவாரம் கேட்டது. இராம இலக்குவரைக் கொல்லாவிட்டாலும், அவர்களை எதிர்த்து அடக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றிருந்ததை மேகநாதன் வெளிக் காட்டிவிட்டான். அவன் நிகும்பலை யாகத்தைச் செய்து முடித்தால் வெற்றி திண்ணம் என எண்ணினான். யாகம் தொடங்கியது. ஆனால், அது முடிவு பெறுவதற்கு முன் இலக்குவன் அதை அழித்து விட்டான். பின்னர்ப் போரில் மேகநாதனும் இறக்க நேர்ந்தது. அவனைப் போருக்கு அனுப்புகையில், அவனால் வெற்றி அடையக்கூடும் என்றே இராவணன் எண்ணினான். கும்பகருணனால் வெற்றி கொள்ள முடியாதவரை, மேகநாதனோ தானோ, வெற்றிகொள்ள முடியாது என்ற எண்ணத்துக்கு இராவணன் இடமளிக்கவில்லை. மேகநாதன் பகைவரைப் பிணித்தது, இராவணனுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்ப உறுதி அளித்தது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக மேகநாதன் இறக்கவே, இராவணனது சோகம் எல்லை கடந்து செல்கின்றது. சினத்தொடும் கொற்றம் முற்றி இந்திரன் செல்வம் மேவி நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால் எனக்குநீ செய்யத் தக்க கடனெலாம் ஏங்கி ஏங்கி உனக்குநான் செய்வ தானேன் என்னின் யார் உலகத்து 2 6ίτGππή ? (கம்பன் - 9224) சினமும் வலிமையும் சிறக்கப்பெற்று, இந்திரன் நிலைலையே அடைந்து, நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவனாய் இருந்தான் இராவணன். சினமுடையார் செயல்கள் நல்ல முறையில் முடிவடையமாட்டா. ஆனால், இராவணன்