உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்கிறான் இராவணன். இவ்வளவு உணர்ந்தவன் வீடணனைக் கொல்லாவிட்டாலும், அவனை ஏன் சிறைப்படுத்தி வைத்திருக்கக்கூடாது? உட்பகையே பகைவரைக் காட்டிலும் கொடியது என்பதை உணராதவனா இராவணன்? தன் தம்பியை - தன்னால் வளர்க்கப்பட்டவனை - துன்புறுத்த இராவணன் மனம் இடந்தரவில்லை. நமக்குக் கேடு வந்தாலும் வரட்டும்; அவனைத் துன்புறுத்தினோம் என்ற பழி வாராமல் இருந்தாற்போதும் என்று எண்ணி வீடணனை வெளியேறச் சொன்ன இராவணனுடைய அன்பு எத்துணைத் தூய்மை யானது!