பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 6 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் "இவற்றை இழந்துவிட்டோமே!" என்ற உணர்ச்சியும் இன்றி, இனி மீண்டும் நல்லாற்றிற்சென்று புகழ் ஈட்டப் பயன்படக்கூடிய அறிவையும் இழந்து விட்டிருக் கிறான். அவன் இனி எவ்வாறு உய்யக்கூடும்? அவனுடைய வீழ்ச்சியில் பகைவர் பலத்தை உணர முற்படாததும், தன் பலத்தைப் பெரிதாக மதித்ததும், உட்பகையை அறிந்து ஒழிக்காததும் ஆகிய செயல் களைச் செய்வித்த அறிவிழப்பு மூன்றாம் படியாய் அமைகின்றது. பெரியார் ஒருவருடைய வீழ்ச்சிக்கு உலகமே ஏங்கும் அன்றோ? இதனை இயற்கையின் மேலேற்றிக் காட்டுதல் கவிமரபு. இயற்கையில் நிகழ முடியாத சம்பவங்களை நிகழ்ந்தனவாகச் சித்திரித்து, இவை தலைவன் அழிவுக்கிரங்கி இவ்வாறு நிகழ்ந்தன என உணர்த்துவது எந்நாட்டுக் கவிஞரும் விரும்பிக் கையாளும் ஒரு விரகு. ஜூலியஸ் ஸிலர் கொல்லப்படுவதற்கு முந்தின இரவே, மக்கள் இயற்கையை இறந்த (Super natural) பல நிகழ்ச்சிகள் நிகழக்கண்டார்கள். nஸரின் மனைவி யான கல்பூர்னியா, துன்னிமித்தங்களைக் கண்டாள்; கணவனை அன்றுமட்டும் அரசவை செல்ல வேண்டா என்று வேண்டிக் கொண்டாள். அவனும் தன் மனைவியை மகிழ்விக்க, அவ்வாறே செய்ய ஒப்புக் கொண்டான். ஆனால், கொலைகாரர். அவ்வாறே செய்வது அவனுக்குப் பழியைத் தரும் என்று வற்புறுத்தினர். பழிக்கஞ்சி nஸர் தன் மனைவியின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டுச் சென்றான். கொலையுண்டு மாண்டான்.