பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமையின் வளர்ச்சி 6 195 வர், பகைவருடைய வல்லமையையும் உற்பாதங்களின் தோற்றத்தையும் எடுத்துக் கூறியது அவனுக்கு அவர்கள் தன்னுடைய பெருமையையும் பலத்தையும் பழித்துக் கூறுவதாகவே தோன்றிற்று. ஆகவேதான் மீண்டும் மீண்டும் தன்னைப்பற்றிப் பிறர் அறிந் திருந்தவைகளையே கூறுவதோடு மூர்க்கத் தனத்துடன் அவர்கள் பொருளுரைகளையும் புறக்கணிக்க முற்படுகிறான். வீடணன், மாலியவான் முதலியோரும், இயற்கையும் இரு திறத்தாருடைய வல்லமைகளையும் அளந்து பார்த்துத் தீர்ப்பளிப்பதை, இராவணன் உணரவொட்டாதபடி செய்தது அவனுடைய தன்னம்பிக்கை. இல்லையேல், பகைவர் நகர்ப்புறத்தில் சூழ்ந்திருக்க, அவர்களை எதிர்க்க எழுந்த சேனையைக் காணச் சென்றவன் பெண்களை உடனழைத்துக் கொண்டு செல்வானா? பொறுப்பற்ற முறையில் இராவணன் நடந்து கொள்வதை அவனுக்கு உணர்த்துவது போன்றே மகுட பங்கம் நேர்ந்தது! எனினும், இராவணன் மாறவில்லை. இல்லையேல், அங்கதனிடம் 'சீதையைப் பெற்றேன்; உன்னைச் சிறுவனுமாகப் பெற்றேன்; ஏதெனக்கரியது? எனப் பெறாதவைகளைப் பெற்றதாகவும், அந் நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயமில்லை என உறுதியுடனும் கூறுவானா? தன்னம்பிக்கை காரணமாகத் தோன்றிய செருக்கும் மூர்க்கத்தனமும் அவனை இன்னும் எந்நிலைக்குக் கொண்டு செல்லுமோ! இராவணனுக்கு உண்மையை விளக்க இயற்கை இருமுறை துன்னிமித்தங்களைத் தோற்றுவித்ததைப் போலவே, அவன் தன் பலத்தில் கொண்டிருந்த