பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலம் 35 வடிவான இராவணனை நன்மையே வடிவான இராமன் கொன்றானாதலின் இங்கு அவலமே இல்லையென்றுங் கூறுகிறவர்கள் உண்டு. இவர்கள் கூற்று உண்மையாவென ஆராயவேண்டும். அவர்கள் கருதுகிறபடி வைத்துக் கொண்டாலும் நன்மை அழிக்கப்படும் பொழுது அவலம் தோன்றுகிறது. இவ்விடத்தில் சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டும் இராவணன் மாட்டே இரண்டும் காணப்படுகின்றன. அவன் கொண்ட ஆசை அழிக்கப்படுவது முறை. இராகவன் வாளி, சானகியை இராவணன் தன் மனச் சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியது என்று கவி கூறுமாற்றான் ஆசை அறவே ஒழிக்கப்பட்டமை பெற்றாம். ஆனால், அழிந்தது. அஃது ஒன்றுமட்டுமா? அல்லவே! இது மட்டும் அழிக்கப்பட்டிருப்பின் அஃது அவலமுமாகாது. அதற்கொரு காப்பியமும் தோன்றாது. ஆனால், அதனுடன் உறைந்த எத்தனை நன்மைகள் அழிந்தன! அந் நன்மைகளின் அழிவுக்கே நாம் வருந்துகிறோம். வியப்போடு கலந்த அச்சமும் கொள்கிறோம். கவிஞனும் அதனையே வலியுறுத்து கிறான். "மூன்று கோடி வாணாளும், முயன்று பெற்ற பெரிய தவமும், முதல்வனால் முன்னாளில் எக்கோடி யாராலும் வெல்லப்படாய் என்று கொடுக்கப்பட்ட வரமும், உலகனைத்தையும் செருக்கடந்த புயவலியும்" எளிமையாக யாரும் பெறுதற்குரிய பண்புகள் அல்லவே! நற்பண்புகள் என்பவை இவற்றினும் வேறு எவை உண்டு? இவையெல்லாமன்றோ அழிந்தன! இந் நற்பண்புகளின் அழிவிற்கு நாம் வருந்துகையிலேயே அவலம் பிறக்கிறது.