உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் மாத்திரையாய் நிற்பதற்கு ஏற்பட்டதன்று: உணர் தற்கும், உணர்ந்து நடப்பதற்கும் அன்றோ ஏற்பட்டது: இதனை நன்குணர்ந்த கவிஞர், 'நீதி உணர்ந்த தருமனா இங்ங்னம் செய்தான்! என்று வருந்துகிறார். இது நிற்க, இராவணனது கல்வி எத்தகையது என்பதை ஒரே அடியில் கும்பகர்ணன் கூறிவிடுகிறான்: "ஆயிரமாயிர மான மறைகளையும், மறைகளின் பொருள்களையும் நன்கு உணர்ந்தான்; உணர்ந்த அளவோடு நில்லாமல், வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்தி அறிவு அமைதியான நிலையை அடைந்தான்; தெளிவை அடைந்தான்.” அங்ங்ணம் அல்லாக்கால் வள்ளுவப் பெருமான், ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல். (குறள், 834) என்று கூறியாங்குப் பேதையாகவன்றோ அவன் ஆகிவிடுவான் ? இவ்வோர் அடியாலேயே இராவணனன் சிறப்பும், அச்சிறப்பை நன்குணர்ந்த அவன் அருமைத் தம்பியின் சிறப்பும் நன்கறியக் கிடக்கின்றன. இவ்வளவு அறிவு படைத்தவனாகலின், கும்பகருணன் அவனை நோக்கி மேற்கூறியவாறு கூறுகிறான். "உனக்கு ஏற்படும் பழியை நீ சட்டை செய்ய வில்லையாயினும், குலத்திற்கு வரும் பழியைக் கூடவா மறந்து விட்டிாய்?" என்ற முறையில் அவன் பேச்சு அமைந்திருத்தல் அறிக. மேலும், அவன் கூறுகிற ஒன்பது பாடல்களுள் ஏறத்தாழப் பாடல் தோறும் குலப் பெருமையும் புகழும் பேசப்படுகின்றன. இங்ங்ணம் எடுத்துக் கூறுவதாலேயே இராவணன் இவை இரண்டையும் பெரிதும் மதிக்கின்றவன் என்பது