பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

13

தலைவியும், அவளின் அண்ணனும் பேசுகிறார்கள்.

குழந்தைக்குப் பண்டம் வழங்கினார் மாமா.


மைத்துனர் வீடு வந்து நுழைந்தார்.
ஒத்த அன்பின் உடன்பிறந் தாளைத்
"தங்கையே என்ன அங்கே செய்கிறாய்?
உடம்புக் கென்ன ? ஒன்று மில்லையே?
குழந்தைக் கென்ன? குறைபா டில்லையே?
பெரியவன் நலத்தில் பிழைபா டில்லையே?
குடித்தனம் எவ்வாறு? தடித்தனம் இல்லையே?"
என்று கேட்டார். எதிரில் நின்றவள்
"இருக்கின் றேன்நான்" என்று கூறினாள்
சாகாதிருப்பது தனக்கே வியப்போ?



அங்குப் பாயினில் அயர்ந்து கிடந்த
வாயிலா குழந்தையை மைத்துனர் கண்டார்.
இயம்ப முடியா இரக்கம் அடைந்தார்.
அவ் விரக்கத்தின் அறி குறி யாகத்
தூங்கும் பிள்ளையைத் துயருற எழுப்பி
வாங்கிவந்த மாம்பழம் அனைத்தையும்
ஆங்கே குழந்தை அண்டையில் பரப்பினார்.
பூந்தி கட்டிய பொட்டணம் அவிழ்த்துக்
கொஞ்சம் அள்ளிக் குழந்தை முகத் தெதிர்
வஞ்சம் இன்றி வைத்துக், குழந்தையே
பாங்கொடு தின்னப் பழமும் பூந்தியும்
வாங்கி வந்தேன் மருந்துபோல் என்றார்.

3

17