பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

மெதுவாய் நடந்து வெளியிற் செல்கையில்
இதுவா தெருவுக்கு - ஏற்ற வழியென்று
திருடன் கேட்டுச் சென்று மறைந்தான்.
திருடன் கையோடு செல்வமும் மறைந்தது.
தலைவியும் பையனும் தலைவர் தாமும்
குலைநடுக் கத்தால் கூவா திருந்தனர்!

43