உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்!
கையும் காலும் இல்லான் கற்க,
உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான்.
இல்லார்க் கெல்லாம் உலகில்
கல்விவந் ததுவெனில் கடைத்தேறிற் றுலகே.

48