பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய வாய்ப்புப் பெற்ற ஆருயிர் நண்பர்கள் அருகிருந்து கண்ணீர் மல்கிட இறந்துபட்டான்--நீங்காத துயிலுற்றான் என்றனர் உடனிருந்தோர். 104 மண்டலங்கள் பலவற்றை மருட்டிய மாவீரனான மகன் இறந்துபட்ட இடத்துக்கு நெடுந்தொலைவிலே, பெற்ற மாது இருந்தாள். நெப்போலியனைச் சிறைப்படுத்தியது மட்டு மல்ல, அவன் உடன் சென்றிருக்க, அன்னைக்கு அனுமதி அளிக்க, அதிபர்கள் கூட்டுக் கழகம் மறுத்துவிட்டது. நெடுந்தொலைவிலே கண்ணீர் சிந்தியபடி, தாய்! துணைவி? அரண்மனையில்!! அரசகுமாரி, மேரி லூயி ஆஸ்ட்ரியாவில்! மகன்? இளவரசன்!!- அவனும் ஆஸ்ட்ரியாவில். தாய் இல்லை! மனைவி இல்லை!! மகன் இல்லை! நெடுந்தொலைவிலே இருக்கிறார்கள். எலினா தீவிலே அவன இறந்துபடுகிறான்-ஓர் நீர் ஊற்றுப் பக்கத்தில் மரங்கள் அடர்ந்த சிறு தோட்டத்தில், புதை குழி!! அந்த இடத்தைக் கூட. நெப்போலியன், முன்னதாகவே கண்டு வைத்திருந் தான்-- காவல் காத்திருந்த அதிகாரிகளுக்குத் தெரிவித்திருந் தான். "என் உடலை, பாரிஸ் பட்டினத்துக்கு அனுப்பச் சொல்லிக் கேளுங்கள். மறுப்பார்களானால், நமக்குப் பருகும் நீர் கிடைத்து வந்ததே, நீர்ஊற்று, அதற்கு அருகாமையில், என் உடலைப் புதைத்துவிடச் சொல்லுங்கள் என்று, நெப்போலியன், உடனிருந்த நண்பர்களிடம் கூறினான். "இந்த நாட்டுக்கு இவனை மன்னனாக்கினேன்! இந்த மன்னனை இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் மண்டி யிடச் சொல்லு! இத்தனை இலட்சம் வீரர்கள் புறப்பட்டாக வேண்டும்!' என்ற இதுபோன்ற ஆணைகளைப் பிறப்பித்து வந்த நெப்போலியன், நான் இறந்துபட்ட தும், என் உடலை இன்ன இடத்திலே புதைத்து விடுங்கள் என்றும் ஆணை கூறிய பிறகுதான் ஆவி பிரிந்தது.