உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் மாணவர்களின் உரையாடல் இந்தக் கருத்துப்பட. மாணவ னாக இருந்தபோதே, நெப்போலியனுக்கு, வீரத்தின்மீது. வெற்றியின்மீது நினைப்பு! அப்போது அவன் கண்களுக்கு, கார்சிகா பிடிபட்டு, பிரான்சுடன் பிணைக்கப்பட்டிருப்பது தான் மிகப் பெரிதாகத் தெரிந்தது. அதனால்தான், கார் சிகா விடுதலை பெறவேண்டும், பிரான்சு நாட்டுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம் துடித்தது. முயற்சிகளி லும் ஈடுபட்டான்-வெற்றி கிட்டவில்லை? 109 உன் ஆற்றலுக்கு ஈடான வெற்றி, சின்னஞ்சிறு தீவான கார்சிகாவை விடுவிப்பதாகவா இருக்க வேண்டும்? உன் ஆற் றல் மிகப்பெரிது! கார்சிகாவை அடிமைகொண்ட பிரான்சு நாடே உன் காலடியில் விழப்போகிறது! உன் தீவைப் பிடிக் கப் பாய்ந்துவந்து, பிரான்சுப் போர் வீரர்களே,உன் ஆணைக் குக் கட்டுப்பட்டு, உன் சுட்டுவிரல் காட்டும் திக்கு நோக்கிப் பாயப் போகிறார்கள். பிரான்சுக்கு அதிபனே ஆகப்போகி றாய்! உன் ஆற்றல் உன்னை அந்தச் செயலுக்கு அழைத்துச் செல்லப்போகிறது. இடையிலே கார்சிகா விடுதலைக்காக வேலை செய்யவேண்டுமா!!-காலம் கூறிற்று போலும் இது போல. கார்சிகா, பிரான்சுடன் பிணைக்கப்பட்டிருந்தது. என் றாலும், என்ன காரணத்தினாலோ, ரூசோ"ஐரோப்பா வையே ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது இந்தக் கார்சிகா என்றோ ஓர் நாள்.” என்று எழுதினார். கார்சிகா விடுதலைக்காகப் போராடி, நாடு கடத்தப் பட்ட தளபதிக்கு நெப்போலியன் எழுதிய கடிதத்தில், மாண வனின் மனக்கொந்தளிப்பு நன்கு தெரிந்தது. "என் நாடு இறந்து கொண்டிருக்கும்போது நான் பிறந்தேன். உரிமையை அழித்திட 30000 பிரான்சுக்காரர் கள் இங்கு கொட்டமடிக்க வந்த நேரம். நான் தொட்டி லில் கிடந்தபோது அதைச்சுற்றி, இறந்து படுவோரின் அழு- குரல், கொடுமைக்கு ஆளானோரின் குமுறல், கண்ணீர் இவையே இருந்தன.