பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 இருபது ஆண்டுகள் ஆனால், காதலியுடன் கடமை அழைக்கிறபோது கொஞ்சிக் கிடப்பதா? என்று கேட்டானே, மாணவப் பரு வத்தில் அந்த நெப்போலியன்,அழகி ஸோசபைனை அடைந் ததால், மறைந்துவிடவில்லை. ‘இத்தாலி நாட்டின்மீது தாக்கு தல் நடத்தப் பெரும் படையொன்று கிளம்பட்டும் - உன் தலைமையில்' என்று அரசு ஆணை பிறப்பித்தது. 'கண் ணாளா!' என்று அவளும், 'கட்டித்தங்கமே!' என்று வீரனும், 'மலரா. இதழா?' என்று அவனும், 'கேலியா போதையா?' என்று அவளும் பேசி மகிழும் காலம்-மணமாகி இரண்டு போரிடச் நாட்கள் முடிந்ததும் இந்த அழைப்பு--கடும் செல்லும்படி. 'என் இதயம் என்னிடம் இல்லையே! அதனைத் தங் களுக்குக் காணிக்கையாக்கி நாட்கள் பல ஆகிவிட்டனவே!' என்று கூறி, தன்னை அவன் அணைத்துக் கொள்ளும் உரி மையை ஜோசபைன் அளித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட எந்த அளவிலும் குறைவான களிப்பல்ல—இத்தாலி மீது போரிடப் புறப்படுக!'- என்று அரசு அழைத்தது கேட்டு. கையாள நாட்கள் இரண்டுதானே ஆகியுள்ளன-நெஞ்சிலே உல வும் எண்ண அலைகளைப் பற்றிப் பேசி மகிழக்கூட நேரம் காணாதே--பூங்காவிலே உலவி, புதுவித இன்பம் சுவைத்திடு வதற்கு ஏற்ற மணக்கோலம் கொண்டுள்ள போதா, களம் நோக்கிச் செல்ல ஆணை - கட்டழகியை பறந்து!- நெப்போ லியன் இதுபோல எண்ணி ஏங்கினானில்லை. இத்தாலியைத் தாக்குவது எப்படி? என்னென்ன முறைகளைக் வேண்டும்? எவ்வளவு வலிவு திரட்ட வேண்டும்?- என்ற இவை பற்றிய எண்ணம்தான் அவனை ஆட்கொண்டது. விடுவித்துக் கொண்டான். அணைப்பிலிருந்து தன்னை 'அன்பே! உன் காதலன் எத்தகையவன்—-எத்துணை ஆற்றல் மிக்கவன் -- என்னென்ன விருதுகள் பெறப்போகிறான் பார்! நீ மகிழத்தக்க, பெருமைப்படத்தக்க வெற்றிகளைப் பெற்றிடக் கிளம்புகிறேன்; பற்பல நூற்றாண்டுகளாகப் பாரோர் மெச்ச விளங்கி வரும் இத்தாலி செல்கிறேன்! உலகப் பெருவீரன் ஜுலியஸ் சீசர் உலவிய இடம்! அங்கு