உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 இருபது ஆண்டுகள் வந்தாள் ஜோசபைன்! நெப்போலியன், முதுமைக் கோல விதவையை எதிர்பார்த்தான்— அவன் எதிரில் வந் ததோ, புன்னகை பூத்த முகத்தழகி, புதுமலர் போலும் எழிலுடையாள், ஜோசபைன். "வாளைத் திருப்பித் தந்ததற்கு என் நன்றி..." என்றாள் வனிதை! ஒரு வாளா, ஓராயிரம் வாட்களைத் திருப்பித் தரச் சொன்னாலும் தரலாமே- இவ்வளவு சுவை மிகு பார்வையோடு, கேட்டால்! வாளைப் பறித்தவனை, வேல் விழியால் அவள் வென் றாள். சீமாட்டி எனும் நிலைக்கு ஏற்ற கெம்பீரம்- அதே போது அதிலே ஓர் தனிக் கவர்ச்சி - அதிகம் பழக்கமில்லாத வரிடம் பேசும்போது காட்டவேண்டிய கூச்சம்! தயக்கம்! அதேபோது பேச்சிலே ஒரு இனிமை, குளுமை! களம் கண்டவனானால் என்ன, வெற்றிபெற நெப்போலியனால் மட்டுந்தானா முடியும். ஜோசபைன் என்ன, போர் முறை தெரியாதவளா? கட்டழகி விட்ட பார்வை, அவன் கட்டு ல் எங்கும் பாய்ந்தது--அவள் வென்றாள்! இவ்விதம் தொடங்கிய காதல்தான், கடிமணமாகி மலர்ந்தது. ஆனால் மணத்தை நுகர்ந்து கொண்டிருந்த வேளையிலே போர் நடாத்த அழைப்பு வந்தது. மாவீரன். இந்தாலி நோக்கிச் சென்றான். நெப்போலியன் கட்டழகி ஜோசபைனிடம் கட்டுண்ட திலே வியப்பில்லை-அந்த வசீகரத்தின் முன்பு வீழாமலிருக்க இயலாது. ஆனால், மற்றோர் காரணமும் உண்டு. நெப் போலியன், ஏற்கெனவே ஒரு மங்கைக்காக ஏங்கிக் கிடந்து, அது எட்டாக் கனியாகிவிட்டதால், மனதிலே வாட்டமுற் றுக் கிடந்தவன். மாடப்புறா கிட்டவிட்டால், மணிப் புறா கிடைக்கட்டும் என்று எண்ணி, வேட்டையாடிடும் போக்கி னன் அல்லவே. எனவே காதல் முயற்சியிலே ஏற்பட்ட தோல்வி நெப்போலியனுக்குப் பெருத்த வேதனையைத் தந் தது. தன் மனநிலையை விளக்கி, ஒரு காதற்கதை எழுதி னான். எந்த எண்ணத்தையும் எழுச்சியையும், நாடகபாணி