பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 இருபது ஆண்டுகள் ஓர்நாள், ஏரிக்கரை ஓரத்திலே எழில் மங்கை ஒருவ ளைக் கண்டான். அவள் பெயர் யூஜினி! காதல் கொள்கின் றனர் - கடிமணம் நடக்கிறது. கடமை அழைக்கிறது; களம் செல்கிறான்; சீறிப் போரிடுகிறான்; படுகாயமடைகிறான். நண்பன் ஒருவன் மூலமாக நிலைமையை, யூஜினிக்குச் சொல்லி அனுப்புகிறான். தூது சென்றவனோ அந்தத் தோகை மயிலாளைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கிவிடுகிறான். பாவை என்ன சொன்னாள், பதில் என்ன வரும் என்று படுகாயமுற்ற நிலையிலே வீரன் களத்திலே காத்துக் கிடக் கிறான். அங்கோ-தூது சென்றவனிடம் அந்தத் தூரத்தை கொஞ்சிக் கிடக்கிறாள். அது தெரிகிறது கிளிசானுக்கு. நடமாடும் நிலைபெறு கிறான். ஆனால் மனதிலே வேதனை கொட்டுகிறது. ஊர் திரும்பினானில்லை. மீண்டும் களம் நோக்கிப் பாய்கிறான்- மாற்றாரின் படை வரிசை மிகுதியாக உள்ள பக்கம் சென்று போரிடுகிறான்-உடலெங்கும் வடுக்கள்-ஓராயிரம் தாக்கு தல்கள் -- போரிட்டபடி மடிந்து போகிறான். கர்தலில் தோல்வி கண்டதும், கட்டாரியால் குத்திக் கொல்பவர்கள் அல்லது கட்டாரியால் குத்திக்கொண்டோ, கடுவிஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்பவர்கள், காதலிலே துரோகம் இழைத்தவளை காரி உமிழ்ந்து அவளு டைய கயமைத்தனத்தை ஊரறியச் செய்பவர்கள்-- இப்படி யெல்லாம்தான் எழுதுவார்கள் கதை எழுதுவோர். நெப்போலியன் அவ்விதம் அல்ல! காதலிலே ஏற்பட்ட தோல்வி காரணமாக, வாழ்க்கை வெறுத்துப் போகுமானா லும், கடும்போரிட்டபடி, களத்திலே மாற்றாரைத் தாக்கிய படி, மாற்றாரின் தாக்குதலைப் பெற்றபடி, கடைசி மூச்சு இருக்கும் வரையில் போராடிக் களத்திலே மடிந்து விடவேண் டும் என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.