பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய இல்லை. ஒருபலனுமற்ற இந்த வாழ்வு இருப்பானேன்- முடித்துக் கொண்டால் என்ன? இவ்விதமாக, மனம் வெதும்பி எண்ணுகிறான், நெப்போலியன். எண்ணங்கள்—அவைகளைச் 130 உள்ளத்தில் ஓராயிரம் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், எண்ணங்கள் நச்சரவுகளாகி இதயத்தை அல்லவா கடித்து, பிய்த்துத் தின்னத் தொடங்கும்? அந்த நிலை நெப்போலி யனுக்கு. அதிலும், துரோகிப் பட்டம் வேறா? செ! என்ன உல கம் இது!- என்று கூறிக் குமுறுகிறான். நண்பர்கள் சிலர், சிறையிலிருந்து தப்பி ஓடிவிடும்படிச் சொல்கிறார்கள். செவி சாய்க்க மறுக்கிறான். என் "நாட்டுக்குத் துரோகியாக என் தந்தையே மாறினா லும் அவரைக்கூடக் குத்திக் கொன்று போடுவேன். னைத் துரோகி என்று தூற்றுவதா! என் தளைகளை நீக்கி, நான் குற்றமற்றவன் என்பதை ஏற்றுக் கொண்டு விடுதலை அளியுங்கள். அடுத்த கணம், என்னைச் சாகச் சொல்லுங்கள் நாட்டுக்காக. தயார்! மகிழ்ச்சி! சாவுக்கு அஞ்சுபவன் நான் அல்ல! களத்திலே. மரணத்தின் பிடியில் பலமுறை சிக்கிக் கொண்டவன். நான்' என்று நெப்போலியன் நண்பனுக்கு எழுதுகிறான். பெரியதோர் ஆபத்து, நெப்போலியனுக்கு ஒரு எதிர் காலம் இல்லாமற் செய்துவிடக் கூடிய பழி, எப்படியோ ஒரே வாரத்திலே துடைக்கப்பட்டு, நெப்போலியன் விடுதலை பெறுகிறான். நாடு பல காலடி வீழத்தச்க போர்த் திட்டங்களை உரு வாக்கி வைத்துக் கொண்டு, உலவுகிறான் மாவீரன்-- மதிப்ச் பளித்து ஏற்றுக் கொள்வார்இல்லை. வாழ்க்கையிலே மகிழ்ச்சி யாவது உண்டா? இல்லை. பணமுடை! சோம்பிக்கிடக்க வேண்டிய நிலை! அண்ணன் ஜோசப் பரவாயில்லை-- வணி கனின் மகளை மணந்துகொண்டு, சொத்து சுகம் பெற்று இருக்கிறான் - நெப்போலியனுக்கு? டிசயரியிடம் கொண்ட காதல் கைகூடவில்லை! பணத்தொல்லை! அண்ணனிடம் சிறிதளவு பொறாமைகூட ஏற்பட்டது.