உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இரத்தம் பொங்கிய "மச்களாம், மக்கள்! என்ன தெரியும், அப்பாவிகளுக்கு? ஆயிரம் அறிவுரை பேசட்டும்; திருந்துவார்களா? அமைப்பு களை மேலும் மேலும் செம்மைப்படுத்தட்டும்; நல்வாழ்வு பெறுவார்களா? ஒருக்காலும் இல்லை. மக்களுக்குத் தேவைப் படுவது, தத்துவங்களுமல்ல, விதவிதமான அமைப்புகளிலே இடமும் அல்ல? அவர்களுக்குத் தேவை, அவர்கள் போற்றத் தக்க, புகழ்மிக்க ஒரு தலைவன்! பரம்பரை காட்டியோ பணத்தைக் காட்டியோ புகழ் பெற்றவர்களை அல்ல; ஆற்ற லைக்காட்டி, பெற்ற வெற்றிகளைக் காட்டி ஒரு தலைவன் புகழ் ஒளியுடன் நின்றால் போதும், மக்கள் அவன் ஏவல்படி நடந்திட போட்டியிட்டுக் கொண்டு வருவார்கள். இது நெப்போலியன் கொண்டிருந்த கருத்து. மக்களை மதியாத மாமன்னர்களை விரட்டி அடித்து, மக்களாட்சி அமைத்த நாட்கள் -- அதே பிரான்சு--அங்கு மக்களை மரப்பாச்சிகள் என்று கணக்கிடும் போர்வீரன்- அவன் புகழ் பெறுகிறான்! பொருள் என்ன? மக்களாட்சி மறைகிறது. மாவீரன் காலடி வீழ்ந்து, அவன் கட்டளைப்படி நடக்கும் முறை வெளிவரு கிறது என்பதுதான். இந்தச் சம்பவம், நெப்போலியனுக்கு ஒரு புதிய இடம் பிடித்துக் கொடுத்திட மட்டும் பயன்படவில்லை. ஆட்சிக் குழுவில் அமர்ந்து அமுல் நடத்தும் பொறுப்பாளர்கள். எவ் வளவு கோழைகள், முதுகெலும்பு அற்றவர்கள் என்பதைத் தெளிவாக நெப்போலியன் உணர்ந்து கொள்ள வைத்தது. வந் பெரிய கூட்டமாம்! துப்பாக்கியுடன் வருகிறார்களாம்! என்று பீதியுடன் பேசினர், நாடாள்வோர். என்ன நடுக் கம்! எத்துணைத் திகில்! இவ்வளவுதானா இவர்கள்—இது கள்! போரிடத் தெரியாத மக்கள், ஆயுதம் எடுத்து தலே, குலைநடுக்கம் எடுக்கும்போது, அஞ்சா நெஞ்சுடைத் தலைவனொருவன் ஆணையின்படி நடந்திடும் ஆற்றலுள்ள கட்டுப்பாடுமிக்க ஒரு படை இவர்களை எதிர்த்தால் என்ன ஆவார்கள்?- என்று எண்ணினான்— எதிர்காலமே அவன் கண்ணெதிரே தெரிகிறது.