பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய செய்தால் மட்டுமே, முடியாட்சி முறை நிலைக்கும், தமது அரசுரிமையும் காப்பாற்றப்படும் என்று கருதி வேலை செய்து வந்தனர். எனவே, பிரான்சுப் படை, வேறு ஓர் நாட்டின் மீது படை எடுப்பதாக மட்டும், போர் அமையவில்லை; வெகு பாடுபட்டுக் கண்டெடுத்த குடியாட்சி முறையின் பகை வர்களை அழித்திடும் இலட்சியப் போராகவும் அமைந்தது. 142 குடியாட்சி முறை குறித்து நெப்போலியனுக்கு மதிப்பு அதிகம் கிடையாது. அவனுடைய திட்டம் திறமையாளர் அரசு நடத்த வேண்டும் என்பதுதான். எனினும், குடியாட்சி முறைக்குக் கேடு செய்வோரைச் சாடுகிறோம் என்று படை. யினர் இலட்சியம் கொள்வதால், வீரம் கொப்பளிக்கிறது என்பது அறிந்து அந்த உணர்ச்சியை வளரச் செய்தான்! பிரான்சு நாட்டுப்படை பிறர் பீதிகொள்ளத்தக்க துணிவுடன் போரிட்டதற்கு இது ஒரு காரணம். மற்றொன்று, வெற்றி பெற்றுத் தரத்தக்க படைத் தலைவனால் நடத்திச் செல்லப் படுகிறோம் என்ற உற்சாகம். பீரங்கிகள் இல்லாமலேயே பெரும் போரில் வெற்றி பெற்றீர்கள்! பாலங்களின்றி ஆறுகளைக் கடந்தீர்கள், காலணி யின்றி கடுவழி நடந்தீர்கள்; உணவு போதுமானது இல்லை. எனினும் நெடுவழி சென்றீர்கள். வீரர்காள்! எனது நன்றி, உங்கட்கு. நாடு, உம்மை வாழ்த்த, நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறது. வளமும் வாழ்வும் நாட்டுக்கு வழங்குபவர் நீங்களே!" படைத் தலைவன் இதுபோலப் பேசிடக் கேட்கும்போது, பட்ட கஷ்டம் அத்தனையும் பறந்தோடிப் போகாதா! வடுக்கள் இருக்கும்; வலி மறைத்துவிடும்! புண் இருக்கும்; புகழ் அதைப் போக்கும் மாமருந்தாகிவிடும். இத்தகைய உற்சாகம், எழுச்சி, ஊட்டிட வல்லவன் அவனிடம் பாராட்டுப்பெற ஒவ்வொரு படைப் பிரிவும் ஆவல்காட்டும்.வீரம் காட்டத்தவறினாலோ நெப்போலியன் வெகுண்டுரைப்பான். அதைத் கொள்ள அஞ்சுவர். நெப்போலியன். 1 தாங்கிக்