பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இரத்தம் பொங்கிய அந்தப் பொருள்கள் ஒவ்வொன்றும் நெப்போலியனுக்காகப் பரிந்து பேசி, செல்வாக்கைத் தேடித்தரும், தூதுவர் போன் றவை அல்லவா! எவரும், நெப்போலியனைப் பற்றியே பேசி வந்தனர். நெடுந் தொலைவில், ஆல்ப்ஸ் மலைக்கு அப்பால் இருக்கிறான், நெப்போலியன், ஆனால் ஒவ்வொரு பிரான்சுக்காரன் உள்ளத்திலும் உலவுகிறான் - எப்படி. என் வீரம்? என்ன என் எதிர்காலம்? என்று கேட்டபடி வெற்றி, வெறி உணர்ச்சியைக் கிளப்பிவிடும். படை வீரர் தோற்ற மக்களைக் கொடுமைப்படுத்துவர் - கொள்ளை- கொலை - கற்பழித்தல் போன்றவைகள் தலைவிரித்தாடும். இதனால் வெறுப்பும் வேதனையும் பெருகும-எந்த நாட்டுப் படையினர் தீயசெயலைச் செய்கின்றனரோ அந்த நாட்டின் மீது ஆடக்கொணா வெறுப்பு உலகினருக்கு ஏற்பட்டுவிடும். உலகமே கண்டு கிலி கொள்ளத்தக்க படை எடுப்புகள் நடத் திய செங்கிஸ்கான், .தமூர் போன்றவர்கள், தமது படை யினர் எத்தகைய கொடுமை செய்திடவும் இடமளித்ததால் துடைக்கப்படமுடியாத இழிவும் பழியும் அவர்களின் பெயரு டன் ஒட்டிக் கொண்டுவிட்டது. பெரும்போர் நடத்தும் முறை மட்டுமல்லாமல், பின் விளைவுகள் பற்றியும் நன்கு அறிந்திருந்த நெப்போலியன், வெற்றிக்குப் பிறகு, படை- யினர் சற்று கட்டுமீறி நடந்துகொண்டறைக் கண்டும் காணா ததுபோல இருந்துவந்தான். பல நாட்களாகத் தொல்லைப் பட்டார்கள், சில நாள் களியாட்டம் தேடுகிறார்கள் என்று எண்ணிச் கொண்டான். ஆனால் கட்டு குலையும் முறையில், கெட்டபெயர் ஏற்படும் விதத்தில், நடந்து கொள்ள அவர் கள் முனைந்ததும், மிகக் கடுமையான ச்ெசரிக்கை பிறப் பித்தான். வெற்றி, வெறியாகக் கூடாது; வீரர்கள், கொள்ளைக் காரர்களாகக் கூடாது; பெற்ற பெருமையைப் பாழ்படுத் தும் கெட்ட காரியத்தில் ஈடுபடுவோர் சுட்டுத் தள்ளப்படு வார்கள்' என்று கண்டிப்பான அறிவிப்பு வெளியிட்டு, படையினரைக் கட்டுக்குக் கொண்டு வந்தான். எனினும், படையினர் கொள்ளை அடிக்க நெப்போலியன் அனுமதி