பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இரத்தம் பொங்கிய ஆணவப் பேச்சுக்காரன்! மக்களாட்சியை மதிக்காத மமதையாளன். இவனை வளர விடுவது ஆபத்து! பிடித் திழுத்து வந்து சுட்டுத் தள்ளவேண்டும்!-என்று ஆட்சிக் குழுவினர் சிலர் கொதிப்புடன் கூறினர். ஆண்டவன் அருளால் அரசனானேன்'- என்று கூறிடும் மன்னர்கள் காலத்தில், மன்னர்களை மிஞ்சக்கூடிய திறமை யும், மருட்டக்கூடிய வலிவும் பெற்று படைத்தலைவன் இருந் தாலும், ஆபத்து வராது-.மன்னனை எதிர்ப்பது மாபாவம் என்ற பயத்தால் கட்டுண்டு கிடக்கும் மக்கள், மன்னனைக் கவிழ்க்க, படைத் தலைவன் கிளம்பினால் ஆதரிக்கமாட்டார் கள். பக்களாட்சிக் காலத்தில் அவ்விதமல்ல; தங்களைப் போன்ற சாமான்யர்கள், தங்கள் தயவை நாடி அரசாளும் உரிமையைப் பெற்றுள்ளனர் - நாட்டுக்குக் கீர்த்தியைத் தேடித் தரத்தக்க ஆற்றல்மிக்க ஒருபடைத் தலைவன் கிடைத் தால், அவனை அழைத்துக் கொலு வீற்றிருக்கச் செய்வதில், ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைப்பதிலே,பாவமு மில்லை, தவறுமில்லை என்ற எண்ணம்மக்களிடம் ஏற்படும். எனவே மக்களாட்சியினர், நெப்போலியன் வெற்றி பல பெற்று, மக்களின் பெருமதிப்புக்கு உரியவனாகியது கண்டு, கிலி கொண்டனர். நெப்போலியன் பேசும் போக்கு அவர் களின் பீதியை அதிகமாச்கிவிட்டது. தலை தப்பவேண்டு தடுத்தா மானால் இவன் கொண்டுள்ள செருக்கைத் வேண்டும் என்று தீர்மானித்தனர்; அதற்கேற்ப நெப்போலிய னுடன் கூட்டாகப் பணியாற்றிட, படைத் தலைமையில் பங்கு பெற கெல்லர் மன் என்பானையும், போரின் விளை வாக எழக் கூடிய அரசியல் பிரச்சினைகளைக் கவனித்துக் கொள்ள செலிசிடி என்பானையும் நியமித்திருப்பதாகச் செய்தி அனுப்பி வைத்தனர், நெப்போலியனுக்கு. நெறித்த புருவத்தினனானான். தான் பெற்ற வெற்றிகளும், அதனால் கிடைத்துள்ள புகழும் செல்வாக்கும் புது வலிவும், நெப்பே லியனுக்கு நம்பிக்கையைத் தந்தன. அதிகாரத்தைக் கட் டுப்படுத்திக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டான்.