பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் மினுப்பு, செல்வம்! ஆனால் அவ்வளவும் அவள் இல்லாத தால் உயிரற்ற நிலையில் உள்ளனவே! 149 அழைப்பு செல்கிறது ஜோசபைனுக்கு! அகமகிழ்ச்சி யுடன் மிலான் வருகிறாள்! நெப்போலியன் பெற்றுள்ள பெருமைமிகு செல்வச் சூழ்நிலையைக் காண்கிறாள்! அழகு மலர் பூத்திடும் பூங்காவும், அதற்கருகே இசை எழுப்பிடும் அருவியும் கண்டால், புள்ளிமாள் எவ்வளவு மகிழ்ச்சியாய்த் துள்ளி விளையாடும்! ஜோசபைன் அதுபோலானாள். போர்வீரன் தானே! களத்திலே ஏற்பட்ட வடுக்களைத் தான் காட்டுவான்' - என்று முன்பு எண்ணிடுவாள்;-- இப் போது, அவன் காட்டுபவை?- அதோ அந்த இருக்கை, சார்டினியா மன்னன் தந்த காணிக்கை, தங்கத்தாலான கோப்பை ஆஸ்ட்ரிய நாட்டவர் அனுப்பி வைத்தது என்று ஆடம்பரப் பொருட் குவியலையல்லவா காட்டுகிறான். வெற்றி, புகழ், செல்வர் இவைகளை அவன் அவளுக்கு அளிக் கிறான். ஆனால் அவள் அளித்ததற்கு இவை ஈடாகா என்று எண்ணுகிறான். அவன் அதுபோல் நினைத்திடத்தக்கதாக, அந்த ஆரணங்கு அவனுக்கு அளித்தது என்ன? புதிதாக! அளித்தாள், அவன் அகமகிழத்தக்க ஒரு சுவைமிகு செய்தி!

  • தாயாகப் போகிறேன்' என்றாள் தழதழத்த

'தந்தையாகிறேனா, தத்தை வால்!' என்று கேட்கிறான் விழியால். குரலில்! மொழியாளே! உன் மான்ட்டிபெல்லோ கோட்டையில், 'தாயர் நடத் தப்படுகிறது, ஜோசபைன் அங்கு வந்த பிறகு.பொன்னொளி வீசுகிறது அங்கு. அங்கு காணப்பட்ட நிலையைக் கவனித்த ஒருவர் சொன்னார்: 'இன்னும் நாலு ஆண்டுகளில் இவன் களத்திலே இறந்து படாமலிருந்தால், நாடு கடத்தப்படுவான் அல்லது அரியா சனம் அமருவான்.'