பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 இருபது ஆண்டுகள் வோர், அச்சுப் பொறி இயக்குவோர், ஆடை. அணிமுறை அறிவோர், வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள், கலைஞர் கள், கவிஞர்கள், இவர்கள் உடன் வருகின்றனர். படிப்பகம் கூட உண்டு. ஒரு பல்கலைக் கழகமே இந்தப் படைத் தலைவ னுடன் பயணமாகிறது. உல்லாசி ஒருவள் வந்திருந்தாளே அவளுடனே ஆடிப்பாடியபடிதான் இருந்தான் போலும் வழிநெடுக என்று எண்ணத் தோன்றும்! அவ்விதம் இல்லை. எப்போதுமே, மெல்லியலாரிடம் நெப்போலியன் தன்னைப் பறிகொடுத்துவிடுவதில்லை. தேன், துளிகள் தானே தேவை --குடம் குடமாகவா!! கப்பலில் மேல்தட்டிலே படுத்துக் கொள்கிறான் நெப் போலியன் இரவுக் காலங்களில்--விண்மீன்கள் மேலே மின்னு கின்றன- அவனைச் சூழ விற்பன்னர்கள் அமர்ந்து கொண்டு உரையாடுகின்றனர், உலக அமைப்பு பற்றிய விஷயத்தி லிருந்து ஊராளும் முறை வரையில்! மேலே காணப்படும் கோள்சளின் தன்மை எப்படிப் பட்டது, ஆங்கு உயிரினங்கள் இருக்க முடியுமா? அங்கெல் லாம் சென்றுவரும் அறிவாற்றலை மக்கள் பெற முடியுமா என்பது பற்றிக் கூடப்பேசுகின்றனர். போரிடச் செல்கிறோம்! வெற்றியோ தோல்வியோ, யார் கண்டார்கள் என்ற எண்ணம் எழவில்லை. ஆற்றலில் அளவற்ற நம்பிச்கை நெப்போலியனுக்கு. வெற்றி பெறப் போகிறோம், நிச்சயமாக; ஆனால் வெற்றிக்குப் பிறகு...! அதுபற்றித் திட்டமிடுகிறான். எகிப்து பழம்பெரும் நாடு- நாலு ஆயிரம் ஆண்டுகளாக அங்கு பல துறைகளிலே வெற்றி கண்டுள்ளனர். ஆகவே அங்கு கண்டறிந்து திரட்டி எடுத் துச் செல்ல வேண்டிய கருத்துக் கருவூலங்கள் நிரம்ப இருக் கும். நாட்டை அடிமைகொண்டு, இவற்றை இழந்து என்ன பயன்? என்று எண்ணித்தான், வெற்றிக்குப் பிறகு, எகிப்து நாட்டிலே பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சி நடத்திப்