பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் கள் எந்த மதத்தை மேற்கொண்டிருக்கிறார்களோ, அந்த மதம், அந்தச் சமயம், என் மதம்' என்று. 161 அலெக்சாண்டிரியா பிடிபட்டது. கெய்ரோவுக்குள் நுழைந்தாயிற்று! நெப்போலியன் கொண்டிருந்த நீண்ட காலத்துக் கனவு நிறைவேறிவிட்டது. இதற்கிடையில், நெப்போலியனுடைய கப்பல்கள் பிரிட்டிஷ் தாக்குதலால், சிதறிச் சின்னாபின்னமாயின. எனவே பிரான்சுக்கும். நெப்போலியனுக்கும் தொடர்பு அறுபட்டுப் போய்விட்டது. ஐந்து திங்களாகச் செய்தியே கிடைக்கவில்லை. பாரிசிலிருந்து. நெப்போலியனுக்குச் சங்கடமும் சலிப்பும் ஏற்பட்டுவிட்டது. தவறி அவனிடம் கிடைத்த ஒரு தகவல், அவன் நெஞ்சிலே தீ மூட்டிவிட்டது! ஆடிப்பாடிக் களிக்கிறாள் புதுக் காதலனோடு, உன்னுடைய ஜோசபைன் என்பது சேதி. வெற்றியாம்! விருதுகளாம்! விழாவாம்! மகிழ்வாம்! புகழாரமாம் எனக்கு. செ! என்ன இருக்கிறது இவைகளில், வீண் ஆரவாரம்! நான் தனிமையை விரும்புகிறேன். கீர்த் தியே எவக்குச் சுமையாகிவிட்டது.' . -- என்று சலிப்புடன் பேசுகிறான் நெப்போலியன். வயது முப்பதுக்கு ஓராண்டு குறைவு. தனக்குச் சலிப்பு ஏற்படலாம். ஆனால் போர் வீரர் களுக்கு ஏற்படக்கூடாதே. ஏக்கம் வளர்ந்தால், வீடு திரும் பும் துடிப்பு எழும்; அதற்கு வழி இல்லை என்று தெரிந்தால், திகைப்பு ஏற்படும். எதிர்ப்புக் குணம் ஏற்படும்; பிறகு...? பூ-162-இ-6