உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 இருபது ஆண்டுகள் மல் திரும்பிற்று--வழியெல்லாம் பிணம்! நடந்து கொண்டே இருப்பர்! கீழே விழுவர்! ஒரு முனகல், ஒரு இழுப்பு, பிண மாவர். பிளேக் தொத்து நோய் என்பதால், அந்தக் காய்ச் சல் கொண்டவர்களை, உடனழைத்துச் செல்லப் பயந்து கொண்டு, அங்கங்கே விட்டுவிட்டுப் போக நேரிட்டது. குற்றுயிராகிக் கிடந்தவர்களை வெட்டி வீழ்த்திக் கொக்கரித் தது வெறி கொண்ட கும்பல்! எங்கும் பீதி, அவதி. நெப் போலியன் கூடுமான மட்டும் அவர்களுக்கு ஆறுதல் அளித் துப் பார்த்தான்; முடியவில்லை. அழிவைத் தடுத்திட இயல வில்லை. எகிப்திலே பெற்ற வெற்றியால் கிடைத்த களிப்பு கருகியே போய்விட்டது. 'பாலைவனத்துக்குப் பலியாகி றோம்; பாரிசில் உலவிக் கொண்டிருந்த நாங்கள்' என்று கூறிக் கதறினர். பலப்பல நூற்றுக்கணக்கானவர்கள், நோயினால் வேதனைப்பட்டபோது, மருந்து கொடுத்து குணப்படுத்தா மல், அதிக அளவு அபினி கொடுத்து அவர்களை நெப்போலி யன் சாகடித்தான் என்று ஓர் குற்றம் சாட்டப்படுகிறது- முற்றிலும் ஆதாரமற்றது அல்ல. செயின்ட் எலினா தீவிலே நெப்போலியன் அடைபட்டுக் கிடந்தபோது, இப்படி நடைபெற்றது என்று ஒப்புக் கொண் டான். ஆனால் வேறு வழியில்லை என்று வாதாடினான். மருந்து இல்லை; அவர்களின் வேதனை வளர்ந்தது! சித்திர வதைக்கு ஆளாகிச் சாவதைவிட, எதிரிகளிடம் சிக்கிச் சிதைக் கப்படுவதைவிட, நிம்மதியான முறையிலே சாவு தேடிக் கொள்ளட்டும் என்பதனால்தான், அபின் கொடுக்கச் செய் தேன் என்று விளக்கம் அளித்தான். விளக்கம், நிலைமை என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளப் பயன்படுகிறது என்றா