பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் ஆபத்து நீங்கியது மட்டுமல்ல, அதே ஆபத்தைக் காரணம் காட்டி, நெப்போலியனுடைய நிலையை மேலும் பாதுகாப் புள்ளதாக உயர்த்திவிட வேண்டும் என்ற திட்டமும் ஏற் பட்டது. 169. 1804ஆம் ஆண்டு ஏழாவது பயஸ் எனும் போப்பாண்ட வர், நெப்போலியனுக்கு முடிசூட்டுவிழா நடத்தினார்; ஆற்ற லால் அதிபனானான்; இப்போது அருளும்கிடைத்துவிட்டது. எட்டுக் குழந்தைகள் கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து, கடினமாக உழைத்து, களம் பல சுற்றிப் போரிட்ட நெப் போலியன் அரசர்க்கரசன் ஆனான்— ஆக்கப்பட்டான்'. மன் னன் வேண்டாம்; அப்படி ஒருவனை உயர்த்திவிடுவது மக்க ளின் உரிமைக்கு உலை வைக்கிறது என்று கூறி புரட்சி நடத் திய பிரான்சு நாட்டிலே மன்னனுக்குப் பதிலாக மாமன்னன் அரசோச்சலானான்! 1805ம் ஆண்டு, இத்தாலி நாட்டுக்கு மன்னன் ஆனான் - அதற்கும் ஒரு தனி முடிசூட்டு விழா நெப்போலியனுடன் ஜோசபைனுக்கும் முடிசூட்டு விழா நடந்தது. முதற் கணவன், சீமான் என்பதற்காக வெட் டிக் கொல்லப்பட்டான், புரட்சி அரசினால். மூன்று மாதம் ஜோசபைனையும் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள். இப்போது அவள் மணிமுடி தரித்துக் கொண்ட மகாராணி! எச்சிற்கலம் என்று ஏளனம் பேசினோர் என்ன ஆயினர்? மகாராணிமுன் மண்டியிடுகிறார்கள்!! உடன் பிறந்தார்கள், உற்றார், உறவினர் அனைவருக்கும், மணிமுடிகள். . பிற்காலத்திலே நெப்போலியன், தனக்குற்ற நண்பர் களுக்கு, தங்கத்தாலானதும் தந்தத்தாலானதுமான பொடி.