பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய இங்கிலாந்திடம் ரஷியாவோ, ஆஸ்ட்ரியாவோ, தன் னைப்போலவே பலக கொண்டுவிட்டால், திட்டம் எளிதாக வெற்றிபெறும் என்ற எண்ணம்கொண்டு, ஒவ்வோர் சமயம் ஒவ்வொரு நாட்டுடன் நேச உறவு ஏற்படுத்திக் கொள்ள முனைந்தான். 172 ரஷியா, பிரஷ்யா, ஆஸ்ட்ரியா எனும் இம் மூன்று அரசுகளும் கூட்டுச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதேபோது இவை ஒவ்வொன்றும், பிரான்சு நாட்டின் ஆதிக் கத்தை றுக்கக்கூடாது; இங்கிலாந்திடம் நேசத் தொடர்பு கொள்ளக்கூடாது-இது நெட்போலியன் நடத்திக் காட்ட விரும்பிய திட்டம். கூட்டாகிப் பணியாற்றினால் மட்டுமே, நெப்போலி யனைச் சமாளிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டதற்குக் காரணம், அச்சமூட்டத்தக்க விதமான வெற்றிகளை, நெப்போலியன் பெற்றதுதான். 1805-1806-1807 ஆண்டு களில் நெப்போலியன், இந்த மூன்று நாடுகளையும், ஆஸ்ட் டர், லிட்ஸ், ஜீனா, பிரயிட்லாண்டு எனும் களங்களில் திட்ட மிட்டு முறியடித்தான். ஏராளமான இரத்தம் கிற்று. ஆனால் நெப்போலியனுடைய புகழ் உலகெங்கும் எதிரொலித்தது. பொங் டில்சிட் என்ற இடத்தில் ரஷிய அதிபருடன் நெப்போலி யன் நேச உறவு கொண்டான்; அது ஒரு விழாவாக, வெற்றி வைபவமாகக் கொண்டாடப்பட்டது. "ஐரோப்பாவின் இப்புறத்தில் நான், அப்புறத்தில் தாங்கள். ரஷிய அதிபரே! நமக்குள் நேசக் கூட்டுறவு நிலைத்துவிடுகிறது. இங்கிலாந்து நாடு இனி என்ன செய்யும்? தீர்த்துக்கட்டி விடுகிறேன். உல கிலே கீழை நாடுகளிலே இங்கிலாந்து பெற்றுள்ள பூபாகங் 4