பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 இரத்தம் பொங்கிய நெப்போலியன். ரஷியாவுடன் போர் தொடுக்க முனைந் தான் -- மிகத் தவறான திட்டம்--மிகத் திறமை கெட்ட முறையிலே திட்டத்தை நடத்த முற்பட்டான். ரஷியா, விரிந்து பரந்து கிடக்கும் பூபாகம்- அந்த ஒரு இடத்திலே எல்லாவிதமான தட்ப வெட்ப நிலைகளும் உள்ளன-- அதுபோலவே, எல்லாவிதமான போர்த்திறன் படைத்தவர்களும் இருக்கின்றனர். தாக்கிடும் போர் நடத்து வோரும், மறைந்திருந்து தாக்குவோரும் உளர். இதுமட்டு மல்லாமல், ஓரிரு களங்களிலே வெற்றி பெற்று விடுவதால் மட்டும் ரஷியாவைச் சரண் அடையச் செய்ய முடியாது களம் மாறிக்கொண்டே போகும்; மேலே மேலே, ரஷியா வுக்கு உள்ளே உள்ளே பாயும் படை புக வேண்டும். எந்த இடத்திலே நின்று போரிட்டால் நல்லது என்பது ரஷியாவில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்-படை எடுப்பு நடத்தும் பிரான்சுக்காரருக்குத் தெரியாது. எல்லாவற்றையும்விட மேலாக மற்றொன்று இருந்தது -ரஷிய அதிபர் அலெக்சாண்டர் போரிட மறுக்கிறார்!- 'சரண் அடையவும் முடியாது. போரிடவும் போவ தில்லை. பாய்ந்து பாய்ந்து ஓயட்டும்-மாயட்டும் பிரான்சுப் படை' என்கிறார் அலெக்சாண்டர்.'உள்ளே பாய்வார்களே' என்கிறார்கள் தளபதிகள்; 'பாயட்டும், அவர்கள் நுழையும் இடத்தைவிட்டு நாம் வெளியேறிவிடுவோம். வேறு இடம் சென்று முகாமிடுவோம்' என்கிறார் ரஷிய அதிபர்.'அங்கும்