உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் களவாடிய வீரர்களிலேயே மிகப் பெரும்பாலோர் வீடு திரும்பவில்லையே, பொருள் எப்படிப் பாரிஸ் போகும்? பொருள் மாஸ்கோவுக்குச் சொந்தம். அதனைச் சூறையாடிய வன் உடல் மாஸ்கோ மண்ணுக்கு உரம் என்றாகிவிட்டது. 183 எந்த இடத்தை இழக்கச் சம்மதித்தாலும் மாஸ்கோவை இழக்க மனம் வராதே! எப்படியும் படையுடன் வருவார் ரஷிய அதிபர் என்றெண்ணினர்-ரஷியப் படையைக் காணவில்லை. ஆனால் அவர்கள் மூட்டிவிட்டுச் சென்ற தீ மாஸ்கோவில் பரவிவிட்டது-நகரம் நெருப்பு மயம்- நாசம் நர்த்தனமாடுகிறது! ரஷியப் படையுடன் போரிடலாம். வாய்ப்புக் கிடைத்தால்! நெருப்புடன் எப்படிப் போரிடுவது! கட்டடங்கள் சரிகின்றன. பொருள்கள் சாம்பலாகின்றன. மாஸ்கோ அழிகிறது. வளையை அழித்தால் அதிலே பதுங்கி இருக்கும் பாம்பு என்ன செய்ய முடியும் - தெளியும் சிவ நேரம் - பிறகு? வேறு இடம் தேடும். அதுபோலத்தான். பொறுத்திருந்து பார்த்தாகிவிட்டது. இனி ஊர்ப்போய்ச் சேரலாம் என்று பிரான்சுப் படை பின்வாங்கத் தொடங் கிற்று. ரஷியப்படை பக்கவாட்டத்திலே தாக்கும் முறையை மேற்கொண்டது; பாதைகளும் பாலங்களும் பாழாக்கப்பட்ட தால், படை. நடைபோட இயலவில்லை. இந்தச் சமயம் பார்த்துத்தான் புதிய பகைவன், கிளம்பினான்--மாரி! பனி பெய்யத்தொடங்கிற்று. கடுங்குளிர்! ஊர்களே உறைந்து போகின்றன! நடக்கக் கால் வரவில்லை! நின்றால் பனி கொல் லுகிறது! உண்ண உணவில்லை; போகும் வழி அடைபட்டு விடுகிறது; கண் பூத்துப் போகிறது; எப்பக்கம் நோக்கினா