உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய நாடு கண்ட பலனாவது உண்டா? இல்லை! பூத்த புரட்சி பொசுங்கிக் கிடந்தது. போரிட்ட பொருளியல் பாழானது. நாட்டுவளம் 188 தாலே எல்லைகளை அழித்தான், போரிட்டுப் போரிட்டு- ஆனால் இயற்கையான எல்லைக்கோடு மீண்டும் அமைந்து விட்டது. மண்டிலங்களை அடிமைகொண்டான்- -ஆனால் அவை மண்டியிட்டனவேயன்றி மடிந்துபோய்விடவில்லை; சமயம் கிடைத்ததும், சரிந்தது சீரமைப்பு பெற்றது. சாய்ந்தது, நிமிர்ந்தது. நாட்டுப்பற்று, இனப்பற்று, தேசீய உணர்ச்சி - இவை களை அழித்தொழிக்க, படைகளால் இயலாது. பயங்கரச் சண்டைகளால் இயலாது! பார் மெச்சும் போர்த்திறன் கொண்ட நெப்போலியன் போன்றவர்கள், இருபதாண்டுகள் இரத்தம் பொங்கிடும் போர் நடாத்தினாலும், இயற்கை நீதியை அழித்திட முடியாது என்பது விளக்கப்படுகிறது. நாடுகளுக்குள்ளே நேசம் இருக்கலாம்-இருக்கவேண்டும் -ஆனால் ஒன்றுக்கு மற்றொன்று அடிமை என்ற நிலை இருத்தல் ஆகாது. அந்த நிலையை எவர் புகுத்தினாலும், வெற்றி கிட்டாது என்பதனை, இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிட நெப்போலியன் நடாத்திய போர் காட்டுகிறது.