பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



116 இறையனார் அகப்பொருள் (களவு சூத்திரம் - உஉ அம்பலும் அலருங் களவு. என்பது என்னுதலிற்றோ எனின், களவொழுக்கினது நெடுங் காலச் செலவின் கண் இவர்க்கு நிகழும் உள்ள நிகழ்ச்சி இன்னது என்று உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : அம்பலும் அலரும் களவு என்பதுஅவ்விரண்டும் நிகழ்ந்தன என்பது தாம் அறியினல்லது யாவ ரும் அறிவாரில்லை; இன்மையின், அவை களவு என்றவாறு ; களவு என்பது, செய்தாரே அறிந்து மற்றொருவர் அறியாத தாகலான் என்பது. அம்பல் என்பது முகிழ்முகிழ்த்தல், அலர் என்பது சொல் நிகழ்தல்; அம்பல் என்பது சொல் நிகழ்தல், அலர் என்பது இல் அறிதல்; அம்பல் என்பது இல் அறிதல், அலர் என்பது அயல் அறிதல்; அம்பல் என்பது அயல் அறிதல், அலர் என்பது சேரி அறிதல்; அம்பல் என்பது சேரி அறிதல், அலர் என்பது ஊர் அறிதல்; அம்பல் என்பது ஊர் அறிதல், அலர் என்பது நாடு அறிதல்; அம்பல் என்பது நாடு அறிதல், அலர் என்பது தேசம் அறிதல். அது பொருந்தாது; என்னை, அம்பல் எனப்பட்டதே அலரும், அலர் எனப்பட்டதே அம்பலும் ஆயின. இஃது அம்பற்கு இலக்கணம், இஃது அலருக்கு இலக்கணம் என்று விசேடங் சாட்டிற்றிலர்; இவை இரண்டால் தம்முள் வேற்றுமை பெறப்படுமாகலான் என்பது. மற்று என்னோ எனின், அம்பல் என்பது சொல்நிக ழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்லுவதாயிற்று; இன்னதின் கண்ணது என்பது அறியலாகாது என்பது. அலர் என்பது இன்னானோடு இன்னாளிடை இதுபோலும் பட்டனதென விளங்கச் சொல்லி நிற்பது.