பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



206 இறையனார் அகப்பொருள் (கற்பு மகளைக் கண்டு நின்று சொல்லினவும், பாங்கன் மீண்டுவந்து இடம் காட்டினவும் இதுவே ஒத்தாகத் தந்துரைக்க. ' அவ்வியல் பல்லது' (இறையனார்-ச) என்னுஞ் சூத்திரத்துவிகற்பம் இதுவே ஒத்தாகத் தந்துரைக்க. தலைமகன் தோழியை இரந்து குறையுறுமாறும், குறையுறாநின்றவழித் தோழி கையுறை மறுக்குமாறும், மதியுடம்படுக்குமாறும், படுத்தவழி இருவர் குறிப்பும்பற்றிக் கூட்டமுண்மை உணரு மாறும், உணர்ந்தாள் அது நெஞ்சிற்குச் சொல்லுமாறும், பின்னைத் தோழி தலைமகனது ஆற்றாமைக்குக் குறை நேரு மாறும், நேர்ந்தாள் தலைமகளைக் குறைநயப்புக் கூறுமாறும், தமர் இற்செறித்தவழித் தலைமகளது கற்பழிவு நோக்கி அறத்தொடு நிற்குமாறும், குறையுறாநின்ற தலைமகனைத் தலைமகளது 'அருமை பெருமை கூறித் தோழி சேட்படுக்குமாறும், தோழி அறத்தொடு நிற்கும் விகற்பமும், இரவுக்குறி விகற்பமும், பகற்குறிக்கண் தோழியும் தலைமகனும் சொல்லும் விகற் பமும், இரவுக்குறியிடத்து வா என்று சொல்லும் விகற்பமும், இரவுக்குறி நிகழும் இடம் இன்ன இடம் என்று சொல்லும் விகற்பமும் ; இரவுக்குறிக்கண் அம்பலும் அலரும் ஆமுறை இரண்டும் களவாமாறும், வெளிப்பட்டபின்றை நிகழுஞ் சொல்லும், புணர்ந்துடன் போக்கும், உடன்போக்கின்கண் தோழியும் தலைமகனும் சொல்லும் விகற்பமும், இடைச்சுரஞ் செலவழுங்குமாறும், அறத்தொடுநிலை மாட்சிமைப் படாதவிடத்துத் தோழி தலைமகளைக் கையடை தந்தாள் ஒழியுமாறும்,