பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இலக்கியக் காட்சிகள்


களையாக மாறியிருக்கின்றான். மே லு ம் தனக்குக் கிடைத்த வரங்களையெல்லாம் பொது நலத்திற்குப் பயன் படுத்தாமற் தன்னலத்திற்காகவே பயன்படுத்தினான் (misuse of power and Penance for personal gains). சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவனே அவற்றைத் தகர்த்தெறிந்தான். பிறன்மனை நோக்குதல் என்ற பெருங் குற்றத்தைப் புரிந்தான். சுக்குரீவனுடைய நிலப்பரப்பைப் பிடுங்கிக்கொண்டதோடமையாமல் அவனை உயிர் வாழக் கூட அனுமதிக்காமல் துரத்தித் துரத்தியடித்தான். எனவே கிட்கிந்தையில் பொதுவாக எவருடைய உயிர்க்கும் உடை மைக்கும் பாதுகாப்பில்லாத சூ ழ் நிலை உருவாகியது (There is no security for life at Kishkindai). Qā35& குற்றங்களிலிருந்து வாலி விடுபட முடியாது.

‘செருக்கினர் வலியராகி நெறி நின்றார் சிதைவராயின்’

உலகம் தழைக்குமாறெங்ஙனம். இது நாட்டிற்கும் வீட்டிற்கும் என்றென்றும் தவறல்லவா? வாலியைக் காட்டிலும் வலிமை படைத்தவர்கள் அவனைக் கொல்ல முடியும். அஃது இராமனைத் தவிர வேறு எவரும் இருக்க வியலாது.

ஆற்றலில் இராமன் வாலியைவிடப் பன்மடங்குயர்ந் தவன். அவதாரச் சிறப்புடைய பரசுராமனின் வலிமை யையே அடக்கியவன். எவரும் தொடக்கூட அஞ்சிய வில் லினை ஒடித்தவன். கூற்றன்ன கைகேயியையே தாயாகக் கருதித் தன் பெருமையை உணர்த்தியவன். தோல்வி யென்ற சொல்லையே அறியாதவன். எனவே அவன் தன் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடவியலாது. இராவணனை வாலியால் வெல்ல முடிந்தது; ஆனால் கொல்லமுடிய