பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இலக்கியக் காட்சிகள்


வர்கள் (outlaws) என்றும், அவர்களை யார் வேண்டு மானாலும் கொல்லலாம் என்றும், அவ்வாறு கொல்பவர் கள் புனிதமான செயலைச் செய்தவர்கள் என்றும் கருதப் பட்டு வந்தனர். கம்பனுடைய கண்ணோட்டத்தில் கூட வாலி ஒரு ‘outlaw தான். எனவே சட்டப்படி இராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றது சரியே!

சட்டப்படி சரியாக இருந்தாலும் தர்மத்தின் அடிப் படையில் சரியா என்றொரு வினா எழும். சுக்கிரீவன், இராமனிடம் அடைக்கலம் என்று முதலில் புகுந்து தன்னைக் காக்க வேண்டும் என்று முறையிடடான். இராமன் மராமரங்கள் ஏழினையும் ஒரே அம்பால் துளைத்தபோழ்து கூட வாலி இராமனைக் காண வர வில்லை. அது மட்டுமாலாமல் இராமனுடைய ஆற்றலை உணர்ந்திருந்தும் பொருட்படுத்தவில்லை. வரத்தின் வலிமையையே நம்பியிருந்துவிட்டான். சட்டத்துறையில் (Petition priority) அதாவது மனுக் கொடுப்பதில் முதன்மை’ என்பார்கள். அவ்வாறு கொடுப்பவர்களுக்கு ஒரளவு சலுகை கட்டாயம் உண்டு. சுக்கிரீவன் நேராக வந்து முறையாக மனுவினைக் கொடுத்துத் தன் கட்சியின் நியாயத்தை எடுத்துரைத்தான். வாலியின் போக்கும், துந்து பி என்ற அரக்கன் கொல்லப்பட்ட முறைமையும், முனிவரின் சீற்றத்தையும் அறிந்து தெளிந்த இராமன் அரச நீதியினைச் செலுத்த முடிவு செய்தான்! பரந்து பட்ட பல்வேறு கோணங்களில் சாட்சியம் (Prepondernce of Evidence) இருப்பதை அறிந்து தெளிந்த பின்னரே இராமன் யோசித்து முடிவுக்கு வந்தான்.

தன்னுடைய உள்ளம் தூய்மையாக இருப்பதால் சீதை கன்னியாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றான். அப்பெருந்தகையின் சிந்த ைன எப் பொழுதும் சீரிதாகவே இருக்கும் என்பதைக் கம்பர் பால்