பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இலக்கியக் காட்சிகள்


‘கவிகுலத் தரசும் அன்ன கட்டுரை கருத்திற்

கொண்டான்

அவியறு மனத்த னாகி யறத்திறன் அழியச் செய்யான்

புவியுடை யண்ணல் என்ப தெண்னினன்’’

(கிட் ; வாலிவதை 126)

என்று கம்பர் பாடிய பாடல் கருத்தில் கொள்ளத் தக்கது. அண்ணல் என்று கருதிய தோடமையாமல் வணங்கிக் குற் றங்களையும் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டு கின்றான். எனவே வாலியைக் கொன்றதனால், அதுவும் மறைந்திருந்து கொன்றதனால், இராமனுக்கு எவ்வகை யிலும் குறையோ கறையோ ஏற்படவில்லை என்பது உறுதி. அது மட்டுமல்லாமல் வாலி, தன் தம்பியை அருகில் வைத்துக்கொண்டே சீதையைத் தேடிக் கண்டு பிடித்து இராவணனைக்கொண்டுவரும் ஆற்றல் அனும னுக்கே உ ண் டு என்ற இன்றியமையாக் குறிப்பினை இராமனுக்குத் தருகின்றான்.

‘மற்றிலேன் எனினு மாய வரக்கனை வாலிற் பற்றிக் கொற்றவ நின்கட் டந்து குரக்கியல் தொழிலுங் காட்டப் பெறிலென் கடந்த சொல்லிற் பயனிலை பிறிதொன்

(றேனும் உற்றது செய்கென் றாலும் உரியன் இவ் வனுமன்

என்றான்’

(கிட்; வாலிவதை : 136)

என்பது பாடல். இந்த அளவிற்கு மனம் திறந்து, இறக்கும் தறுவாயில் இராமபிரானிடம் வாலி பேசுகின்றான் என்றால் அவன் உண்மையில் இராமன் செய்த செயல் சரியென்று கருதித்தானே கூறியிருக்க வேண்டும்? மறைந் திருந்து கொன்றது முற்றிலும் தருமத்தின் பாற்பட்டது என்பது வெளிப்படை. எனவே கிட்கிந்தா காண்டத்து இராமன் தொடர்ந்து தலைமைப்பண்பு கொண்டவ