பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இலக்கியக் காட்சிகள்


ழைக்காமல் மகாராஜர்’ என்று அழைக்கவேண்டும். ‘சுக்ரீவாக்ஞை’ யினை மீற முடியாது. அத்தகைய பெருந் தகையால் வணங்கப்படும் தகைமையாளன் இராமன் என்பதை யுணர்த்தவே கம்பர் மேற்குறித்த பாடலை அமைத்திருக்கின்றார்.

யுத்த காண்டம், மாயாசீதைப் படலத்தில் அனுமனை மாலியவான்,

‘அறை கழல் அனுமனோடும் கால்வரே முதல் வ ரம்மா’’

(யுத்த; மாயா சீதைப் படலம் :54) என்று வியக்கின்றார். அவ்வனுமனின் தனித்தலைவனாக இலங்கும் தகுதி இராமனுக்கேயுண்டு. அனுமனுடைய பெருமைக்குத் தனித்தவொரு காண்டத்தினையே கம்பர் அமைத்திருக்கின்றார் என்றால் அஃது இராமனின் பெரு GU) LD GN) (L} மிகுவிப்பதற்கேயாகும். சுக்கிரீவனின் அமைச்சனாக இருப்பதைவிட இராமனுக்கு வாழ்நாள் முழுமையும் தொழும்பு பூண்டொழுகும் பெற்றியாளனாக அனுமன் மாறியமைக்குக் காரணம் யார் கொல் இச்சொல்லின் செல்வன்’ என்ற இராமனின் திருவாய் மொழிதான்.

ஜடாயு என்ற கழுகரசனின் உடன் பிறந்தவனான சம் பாதியின் சிறகுகள் இராமனின் பெயரை வானவர்கள் உச்சரித்த அளவில் மீண்டும் முளைத்தன என்றால் இராமன் பெயருக்குள்ள ஆற்றல் புலப்படும். இராவணன் சீதையைச் சிறை வைத்த இடத்தைச் சம்பாதிதான் தெளிவு படுத்துகின்றான். பிறருக்குகுதவுவதையே தன் நோக்கமாகக் கொண்ட இராமன் தன்னிடத்துள்ள வரம் பிலாற்றலைத் தன்னலத்திற்காக ஒரு போழ்தும் பயன் படுத்தவில்லை. அதனால்தான் அவன் தொடர்ந்து யாவ ராலும் மதிக்கப்படுகின்றான்.