பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வரவு I 3 I

கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த் தாது தேர்ந்துண்டு மாதர் வாண்முகத்துப் புரிகுழல் அளகத்துப் புகலேக் கற்றுத் திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டு மகிழ் வெய்திக் காதலிற் சிறந்து

(சிலப்பதிகாரம்; மனையறம்படுத்தகாதை; 14-25.)

புறஞ்சேரியிறுத்த காதையிலும் தென்றல் வரவு இவ்வாறே பல்வேறு மலர் மணங்களைச் சுமந்து வருவ தாகக் குறிப்பிட்டுள்ளார் (அடிகள் 115-132.).

‘புலவர் செங்காப் பொருங்திய நிவப்பின் பொதியில் தென்றல் போலாது ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணிர்”. (130-132)

‘புலவர் செவ்விய நாவல் போற்றப்பட்ட சிறப்பினை யுடைய பொதியில் தென்றல் போலிராத மதுரைத் தென்றல் இங்கு வந்து வீசுவதைக் காண்மின்’ என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளமை காண்க.

ஊர்காண் காதையில் மாலை போலப் பூக்கும் மாதவி யானது கொடிவீசிப் படவும், சோலையும் காடும் நறுமலர் களை ஏந்தவும், தென்னவன் பொதிகை மலையின் தென்ற லோடு, அம் மன்னவனின் கூடலிற் புகுந்து, தாம் மகிழும் துணைகளைத் தழுவுவிக்கும் இனிய இளவேனிலான் வேறு எங்கேயுள்ளான்? என்று மதுரைக் காட்சியை வருணிக்கு முகத்தான் இளவேனிற காலத்து இன்பத் தென்றலைக் குறிப்பிட்டுள்ளார்.