பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இலக்கியக் காட்சிகள்


நெறியினை, நற் குருவால் உணர்த்தப்பெற்ற அவன், இடையில் அடையும் சோதனைகள் பலப்பல. நம்பிக்கை இழவு என்னும் உளையைக் கடந்து, இலெளகிகனுடைய குழ்ச்சியிலிருந்து மீண்டு, சிலுவைக் குன்றில் தன் பாவக் கொடுஞ்சுமையை இறக்கி, திருப்பயணத்தைத் தடை செய்ய வரும் அழிம்பன் என்னும் காலனுடன் போரிட்டு வென்று, மாயாபுரியில் சத்தியத்தை விளக்கியதால் சிறைப் பட்டுப் பின்மீண்டு, விடாத கண்டன், கார் வண்ணன், அறிவினன், நிலைகேடன். ஆதியர் ஆகியோரின் குறுக்கீடு களை எல்லாம்வென்று, இறுதியாக ,தர்மசேத்திரம் சென்ற டைந்து மரண ஆற்றையும் கடந்து முக்தி நகரை அடையும் அவனுடைய திருப்பயணத்தை விவரிக்கிறது இக்காவியம். குருவழி காட்ட, நிதானியும், நம்பிக்கையும் வழித்துணையாய் வர, மோட்சப் பயணத்தில் கிறித்தவன் வெற்றி அடைவதாக இக்காவியம் செய்யப்பட்டிருக்கிறது.

இலக்கியச் சிறப்புகள்

உயர்பொருள் பற்றிய உணர்ச்சி உந்துதலால் எழும் இலக்கியம், கற்பனை வளத்துடன், உருவகம், உவமை போன்ற சிறந்த இலக்கியக் கூறுகளையும் கொண்டு, கற் பாரை மனம் மகிழவும், நெகிழவும் செய்வதாகும். உருவக, உவமை அணிகளும் கற்பனையும் இக்காவியத்துள் சிறப்புற அமைந்திருப்பதை முதற்கண் காண்போம்.

உருவகச் சிறப்பு

இக் காவியத்தை முற்றுருவகப் பெருங்காப்பியம் என்றும், தமிழ் மொழியில் உள்ள முற்றுருவகப் பெருங் காப்பியம் இஃதொன்றே என்றும் கூறுவர். உலகம் நாச தேசம்’ என்று உருவகிக்கப்பட்டுள்ளது. வன்னெஞ்சன்,