பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இலக்கியக் காட்சிகள்


உள்நாட்டு வாணிபத்திற்கு உறுதுணையாயிருந்த

ஒடம், பஃறி என வழங்கப்பட்டது. பட்டினப்பாலையில் இத்தகைய பஃறியைப் பற்றிப் பின்வருமாறு சொல்லப் பட்டுள்ளது. ‘வெள்ளை உப்பின் விலையைச் சொல்லி விற்றுப் பண்டமாற்றாக நெல்லைக் கொண்டு வந்தவை; குதிரைச் சாலையிலே நிற்கும் குதிரைகளைப் பிணிக்கு மாறு போலக் கழிசூழ்ந்த பக்கத்திலே தறிகளிற் கட்டப் பட்டுள.”

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி கெல்லோடு வந்த வல்வாய்ப் பஃறி பணைநிலைப் புரவியி னனை முதற் பிணிக்கும் கழிசூழ் படப்பைக் கலியாணர்.”

சிறு மரக்கலங்கள் தோணி, அம்பி என்று வழங்கப் பட்டன. பெரும் மரக்கலங்கள் கொணர்ந்த பொன் முதலிய விலைமதிப்பு வாய்ந்த பொருள்களைக் கழிகளில் இயங்கும் தோணிகள் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தன.

கலந் தந்த பொற் பரிசம் - கழித் தோணியாற் கரைசேர்க்குங்து.”

மேலும், கடல் நீரைப் பிளந்துகொண்டு செல்லும் தோணி யின் செலவிற்கு, உழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடைய குதிரை, பகைவருடைய சேனைத் தொகுதியைப் பிளந்து சென்று போரைச் செய்யும் செயல் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

உழுத்தத ருண்ட வோய் நடைப் புரவி கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ”

- -- **> -

6. பட்டினப்பாலை : 29-32 7. புறநானுாறு : 343: 5-6 8. புறநானூறு : 299 : 2:3