பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இலக்கியக் காட்சிகள்


புகழ் பூத்த துறைமுகப் பட்டினங்கள்

(1) புகார்

பண்டைத் தமிழகத்தே சோழ நாட்டில் காவிரிப்பூம் பட்டினமும், சேரநாட்டில் முசிறியும் பாண்டிய நாட்டில் கொற்கையும் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில், காவிரி கடலொடு கலக்கும் இடத்தில், காவிரியாறு அகலமும் ஆழமும் நிறைந்து விளங்கிய காரணத்தால், பாரம் ஏற்றிய கப்பல்கள் பாய்சுருக்காது சென்று அதன் கரைகளில் வெளி நாட்டிலிருந்து வந்த பண்டங்களைச் சொரிவனவாகும்:

■ ■ 垂 ■ ■ ■ ■ 睡 ■ ■ ■ 睡 ■ 睡 車 கூம்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரங் தோண்டாது புகார்ப் புகுந்த பெருங்கலங் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே..”*

(2) முசிறி

மீன்களை விற்று அதன் விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவியல்களும், வீடும் தோணியும் பிரித்தறிய வாராத படி காண்பாரை மயக்கச் செய்யும் மனையிடத்தே குவிக்கப் பெற்ற மிளகுப் பொதிகளும், மரக்கலங்கள் தந்த பொன்னாலாகிய பொருள்களும், கழிகளில் இயங்கும் தோணிகளால் கரைசேர்க்கப்பெற்ற மலைபடு பொருள் களும், கடல்படு பொருள்களும் முசிறித் துறைமுகத்தில் நெருங்கிக் கிடந்தன.

மீனொடுத்து நெற்குவைஇ மிசையம்பியின் மனை மறுக்குங்து மனைக்குவைஇய கறிமுடையாற்

24. புறநானூறு : 30 10-14.