பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இலக்கியக் காட்சிகள்


சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியை அறுத்து வேலலைப் பரவுவதும் உண்டு.” பலவாக நிறம் வேறுபட்ட சோற்றை உடைய பலியுடன் சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று தலைவன் மார்புசெய் நோய் உள்ள பெண்ணின் நறிய நெற்றியைத் தடவி, முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பான் வேலன் என்பது குறுந்தொகைப் பாட்டொன்றால் நாம் பெறுகின்ற செய்தியாகும். இவ் வெறியாட்டில் தெய்வம் ஏறப்பெற்று அசைகின்ற அசைவு, உலாவி அசைந்து ஆடுகின்ற விறலியின் ஆட்டத்திற்கும், அரிய மணியை உடைய பாம்பின் ஆட்டத்திற்கும் ஒப்பிடப்பட்டுள்ளது.” ஆடுகளத்தில் மகளிர் ஆடுகின்ற ஆட்டம், தெய்வத்திற்குப் பலியாக இட்ட செழுமையாக தினைக்கதிரைத் தெரியாமல் உண்ட மயில் வெம்மையுற்று நடுங்கி ஆடுதற்கு ஒப்பிடப் படுவதும் உண்டு’ குறுந்தொகை,” அகநானுாறு,’ பட்டினப்பாலை, முதலியவற்றில் வெறியாட்டம் மேவிய மகளிரின் தோற்றப் பொலிவைப் பற்றிய செய்திகளைக்

«ΒΕΓΤώύΌΤζσι)ΠΓ Ι Ο .

வெறியாட்டுக் குறித்து இளம்பூரணர்

முன் குறிப்பிடப்பெற்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு இளம்பூரணர் காட்டும் உரையால் வெறியாடல் பற்றிய மேலும் சில கருத்துக்கள் விளக்கமுறுகின்றன.

25. சிறுதினை மலரொடு விரை இ மறியறுத்து.--

திருமுருகாற்றுப்படை : 218 26. குறுந்தொகை : 362 : 3-5 27. பதிற்றுப்பத்து : 51 : 10-13 28. குறுந்தொகை : 105 : 2-4 29. குறுந்தொகை : 366. 30. அகநானுாறு : 370 : 14 31. பட் டினப்பாலை . 154 : 155