பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இலக்கியக் காட்சிகள்


கலித்தொகையின் பிறிதொரு சிறப்புக்குக் காரணம், இது நாடகப்போக்கில் நன்கமைந்திருப்பதாகும்.

இனி, கலித்தொகை காட்டும் மகளிர் கற்புநெறி

யினைக் காண்போம்.

முதலாவதாகக் கற்பு எனப்படுவது யாதென்று நோக்குவோம். உரையாசிரியர் என்றே பெருமையுடன் அழைக்கப்பெறும் இளம்பூரணர், “கற்பு என்பதுமகளிர்க்ரு மாந்தர் மாட்டும் நிகழும் மனநிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது’ என்று பொருள் விரித்துள் ளார். இளம்பூரணரே பிறிதோரிடத்தில், கொடுப்பக் கொள்வது கற்பு என்றமையால், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும், களவுவெளிப்படாத வழி யும், மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளப் புணர்ச்சியான் உரிமை பூண்ட வழியும் கொள்ளப்பெறும் எனக் கொள்க’ என்று குறிப்பிட்டுள்ளார். நச்சினார்க்கினியர் கற்பின் இலக்கணத்தை விரிக்குமிடத்து, அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுக வெனவும் இதுமுது குரவர் கற்பித்தலானும், “அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும், ‘ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட் டியும்’ (தொல். பொ. 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின்கண் ஒரையும் நாளுந் தீதென்று அதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது ஒத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக்கொண்டு துறவறத்திற் செல்லுந்துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று’ என்று நயம்படக்

_

2. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; இ ள ம் பூ ர ன ம்; பொருளியல். நூற்பா, 51 உரை.

3. தொல்காப்பியம்; பொருலதிகாரம்: இ ள ம்

பூ ர ண ம்; கற்பியல்; நூற்பா 1, உரை.